சோமா மண்டல்
சோமா மண்டல் (Soma Mondal) இந்தியாவின் எஃகு ஆணையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதல் முதல் தேதி முதல் இவர் இந்தப்பதவியில் உள்ளார். சோமா மண்டலுக்கு இந்திய எஃகு ஆணையத்தின் முதல் பெண் செயல்பாட்டு இயக்குனர் என்பது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
சோமா மண்டல் புவனேசுவர் நகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை விவசாய பொருளாதார நிபுணர். சோமா 1984 ஆம் ஆண்டில் ரூர்கேலாவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியலில் தேர்ச்சி பெற்றார் </ref>
தொழில்[தொகு]
சோமா மண்டலுக்கு உலோகத் தொழிலில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. தேசிய அலுமினியம் நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளராக சோமா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் இயக்குநர் (வணிகவியல்) பொறுப்பை ஏற்றார். சோமா மண்டல் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இந்திய எஃகு ஆணையத்தின் இயக்குனராக (வணிகவியல்) சேர்ந்தார். டிசம்பர் மாதம் ஓய்வு பெறவிருக்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் தலைவராக விளங்கிய அனில் குமார் சவுத்ரியிடம் இருந்து தலைவர் பதவியை சோமா மாண்டல் பெற்றுக் கொண்டார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Aug 13, Surojit Gupta / TNN / Updated:; 2020; Ist, 09:12. "SAIL's Soma Mondal set to breach steel ceiling - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/business/india-business/sails-soma-mondal-set-to-breach-steel-ceiling/articleshow/77514689.cms.
- ↑ "Smt. Soma Mondal | SAIL". https://sail.co.in/en/ms-soma-mondal-profile.