சோபா தீபக் சிங்
ஷோபா தீபக் சிங் (Shobha Deepak Singh) இந்திய இசை நாடக மேலாளர், புகைப்படம் பிடிப்பவர், எழுத்தாளர், செவ்விசை நடனர் மற்றும் ஸ்ரீராம் பாரதீய கலா கேந்திராவின் இயக்குனர் ஆவார், [1] தில்லி சார்ந்த கலாச்சார அமைப்பான இது அதன் பள்ளிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்க்கான பரப்புரையில் ஈடுபடுகிறது.[2] சாவ் நடனத்திற்கு புத்துயிர் அளித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். இது ஒடிசாவின் ஒரு பழங்குடி தற்காப்பு நடன வடிவம் ஆகும். [3] கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக இந்திய அரசு 1999 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிசார் விருதான பத்மசிறீ வழங்கியது. [4]
சுயசரிதை[தொகு]
சோபா அக்டோபர் 21, 1943 அன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்தார். [3] புதுடெல்லியின் மாடர்ன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு , 1963 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் மற்றும் 1964 ஆம் ஆண்டில் தனது தந்தையின் நிறுவனமான டெல்லி துணி மற்றும் பொது ஆலையில் மேலாண்மை பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . நான்கு ஆண்டுகள் கழித்து, 1967 ல் தீபக் சிங் என்பவரைத் திருமணம் செய்தார், பின்னர், இவர் தில்லி துணி மற்றும் பொது ஆலையில் இருந்து விலகி ஸ்ரீராம் பாரதீய கலா கேந்திராவில் சேர்ந்தார்.[3] இது 1952 ஆம் ஆண்டில் இவரது தாயாரினால் துவங்கப்பட்டது[5]. கேந்திராவின் காமினிஅரங்கத்தை நிர்வகிக்கும் போது, அவர் இளங்கலை பட்டப்படிப்பைப் பெற தனது படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் சம்பு மகராஜ் மற்றும் பிர்ஜூ மகாராஜின் கீழ் நடனத்தையும், பிஸ்வாஜித் ராய் சவுத்ரி மற்றும் அம்ஜத் அலி கான் ஆகியோரின் கீழ் இசையையும் பயின்றார். [3]
1992 ஆம் ஆண்டில், தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் இயக்குநரும் நவீன இந்திய நாடகத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவருமான இப்ராஹிம் அல்காசியின் லிவிங் தியேட்டரில் சேர்ந்தார், [6] மற்றும் நாடக இயக்குனர் பிரிவினைப் பயின்றார் 1996 இல் அதில் பட்டயம் பெற்றார். அவர் அல்காசியுடன் இணைந்து பணிபுரிந்தார், திரீ சிஸ்டர்சு , திரீ கிரீக் டிராஜடீசு, எ இசுட்ரீட்கார் னேம்டு டிசயர், டெத் ஆஃப் அ சேல்சுமேன் ஆகிய படைப்புகளில் அவரது உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். [3] 2011 இல் சுமித்ரா சரத் ராம் இறந்த பிறகு, அவர் பாரதீய கலா கேந்திராவின் இயக்குநராக பொறுப்பேற்றார் மற்றும் அவரது கணவரின் உதவியுடன் கேந்திராவின் செயல்பாடுகளை நடத்தினார். [7]
சிங்,புதுதில்லியில் தனது கணவர் தீபக் சிங்குடன் வசிக்கிறார், இந்தத் தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். [3]
மரபு[தொகு]
சிங்கின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, பாரதீய கலா கேந்திராவின் கீழ் இயங்கும் இசை மற்றும் நடனக் கல்லூரி ஆகும். இது இந்துஸ்தானி மரபுசார் இசையில் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகள், லேசான இசை குரல் மற்றும் நடனம் , கதக், பரதநாட்டியம், ஒடிஸி, மயூர்பஞ்ச் சாவ், பாலே மற்றும் சமகால நடனம் போன்ற பிரிவுகளை வழங்குகிறது. [8] ரவிசங்கர், பிர்ஜு மகராஜ், அம்ஜத் அலிகான், ஷம்பு மகராஜ் மற்றும் ஷோவானா நாராயண் போன்ற பல புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் கலை ஆசிரியர்கள் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர். [8] அவர் புதுடில்லியில் நடத்தப்படும் வருடாந்திர நடன விழாவான சம்மர் பாலே விழாவின் அமைப்பாளர் ஆவார். [9] கலையில் சிறந்து விளங்கும் பிர்ஜு மகாராஜ் 2011 இல் தொடக்க விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான சுமித்ரா சரத் ராம் விருதையும் பெற்றார்.[10]
சான்றுகள்[தொகு]
- ↑ "The Director's Cut". Indian Express. 22 March 2013. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ashish Khokar, Sumitra Charat Ram (1998). Shriram Bharatiya Kala Kendra: A History. Lustre Press. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174360434. https://books.google.com/books?id=k_9kAAAAMAAJ&redir_esc=y.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Personal Profile". Shriram Bharatiya Kala Kendra. 2015. 16 அக்டோபர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Personal Profile" defined multiple times with different content பிழை காட்டு: Invalid<ref>
tag; name "Personal Profile" defined multiple times with different content பிழை காட்டு: Invalid<ref>
tag; name "Personal Profile" defined multiple times with different content - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taking Centre Stage". Indian Express. 25 August 2012. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ebrahim Alkaz". Encyclopædia Britannica. 2015. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ashish Mohan Khokar (9 August 2011). "Sumitra Charat Ram: Doyenne of art patronage dies". Narthaki. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 8.0 8.1 "Prospectus" (PDF). Shriram Bharatiya Kala Kendra. 2015. 13 அக்டோபர் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ballet Parking". Indian Express. 3 May 2011. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pt. Birju Maharaj felicitated at this do". Times of India. 25 February 2011. 3 November 2015 அன்று பார்க்கப்பட்டது.