உள்ளடக்கத்துக்குச் செல்

சோனியா சப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியா சப்பார்
2017இல் சோனியா சப்பார்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுயானைகளுக்கான நட்பு தேயிலை தோட்டத்தை வைத்திருத்தல்
பிள்ளைகள்ஒருவர்

சோனியா சப்பார் (Sonia Jabbar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தோட்ட உரிமையாளரும், வனவிலங்கு பாதுகாவலரும் ஆவார். 2012ஆம் ஆண்டு தொடங்கி, நேபாளம் மற்றும் அசாம் இடையே யானைகள் இடம்பெயரும் போது பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வசதியாக டார்ஜீலிங்கில் உள்ள தனது தேயிலைத் தோட்டத்தை மாற்றினார். இந்திய வனவிலங்கு அறக்கட்டளை இவரது தோட்டத்தை வட வங்கத்தின் பசுமை வழிச்சாலையாக அங்கீகரித்தது; அமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழகம், யானைக்கான நட்பு என்று சான்றளித்தது. 100 ஏக்கர் வனப்பகுதியை உருவாக்கும் மறு காட்டுத் திட்டம் மற்றும் அண்டை பண்ணைகளுக்கான பைலட் பயிர் காப்பீட்டுத் திட்டம் உட்பட யானைப் பாதுகாப்புக்கான கூடுதல் திட்டங்களை இவர் தொடங்கினார். 2019ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்களுக்கான நாரி சக்தி விருது விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

2011 ஆம் ஆண்டில் இவர் குடும்பத்தின் பெரிய தேயிலை தோட்டத்தை மரபுரிமை பெறும் வரை[1] கொல்கத்தாவில் ஒரு பத்திரிகையாளராக இருந்தார்.[2] இது மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் 1200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டமாகும். 1884ஆம் ஆண்டு முதல் நிலத்திற்கு சொந்தமான இவரது குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையாக இவர் இருந்தார்.[3] மேலும் ஆச்சரியப்படும் விதமாக இவர் தொடர்ந்து மூன்றாவது பெண்ணாக இருந்தார். இவரது தாயார் டோலி ஓய்வு பெற விரும்பியபோது இவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டோலி சோனியாவின் பாட்டி சயீதா பத்ருனிசாவிடம் இந்தப் பொறுப்பை பெற்றிருந்தார்.[4] தேயிலைத் தொழில் பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கான சக்தி அங்கு இல்லை. தேயிலைத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தைக் பெற நாள் முழுவதும் பணி புரிய வேண்டும். மேலும் கிடைக்கும் தொகையும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகவும், கணவர்களின் குடிக்கும் அல்லது போதைப்பொருட்களுக்காகவும் செலவிடப்படுகிறது. தேசிய அளவில் தேயிலைத் தொழிலாளர் சங்கங்கள் பெண்களின் தேவைகளைப் புறக்கணிக்கின்றன. இவர் தனது தொழிலாளர்களிடையே விவாதத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இந்த வேலையை சரிசெய்ய முயற்சித்தார்.[2]

யானைகளுக்கான நட்புத் தோட்டம்

[தொகு]

2012ஆம் ஆண்டில் இவரது கவனத்தை ஈர்த்த சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. இவருடைய தேயிலைத் தோட்டத்தின் புதிதாக நடப்பட்ட 35 ஏக்கரை யானைகள் ஆக்கிரமிக்கப் போவதாக இவரது தொழிலாளர்கள் எச்சரித்தனர். எரியும் தீப்பந்தங்கள் மற்றும் பட்டாசுகளால் யானைகள பயமுறுத்துவதே சிறந்த யோசனையாக இருக்கும் என்று இவரிடம் கூறப்பட்டது. வனவிலங்குகளை நேசித்தக் காரணத்தால் தான் எதுவும் செய்யபபோவதில்லை என்று முடிவு செய்தார். காலையில் சேதம் குறைவாக இருப்பதைக் கண்டு அவள் மகிழ்ச்சியடைந்தார். திட்டமிடுவதன் மூலம் இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார்.[1]

காலப்போக்கில் இவர் தனது தோட்டத்தின் வழியாக 400 மீ அகலமான பாதைகளை உருவாக்கினார். இதனால் யானைகள் தங்கள் பாரம்பரிய குடியேற்றத்தை அடைய முடிந்தது. யானைகள் வழி 17 கிமீ நீளமுள்ள வேலியால் தடுக்கப்பட்டுள்ளது, இது அசாம் மற்றும் மகாநந்தா படுகையில் இருந்து நேபாளத்திற்கு செல்லும் வழியைத் தடுக்கிறது. இவருடைய தோட்ம் யானைகள் கூட்டம் இன்றும் இதை அடைய அனுமதிக்கிறது. [1] கூடுதலாக, இவரது தோட்டங்கள் மற்ற தடைகளை உருவாக்குவதைத் தவிர்க்கிறது. வடிகால் பள்ளங்களில் இளம் யானைகளை சிக்கிக்கொள்ள முடியாது என்பதை இவர்கள் உறுதி செய்கிறார்கள் மேலும் இவரது நடைமுறைகள் இரசாயனங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது.[3]. தோட்டங்களின் ஒற்றை கலாச்சாரம் யானைகளுக்கு ஆர்வமுள்ள மற்ற தாவரங்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது.[5]

இவருக்கு 2019 ல் நாரி சக்தி புரஸ்கார் விருது இந்தியக் குடிய்ரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இவ்விழாவில். பிரதமர் நரேந்திர மோதியும் உடனிருந்தார்.[6] வேலையில் ஆர்வமுள்ள உள்ளூர் மக்களுக்காக இவர் ஒரு சங்கத்தை நடத்தி வந்தார். யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் பயன்பாட்டிற்காக 100 ஏக்கரை ஒரு பூர்வீக மரக் காடாக ஒதுக்கியிருந்தார்.[7]

2018 ஆம் ஆண்டில், இவரது பணி முதன்முதலில் பெரிய யானை நட்பு தோட்டமாக நக்சல்பாரியின் அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது. [8] வனவிலங்கு நட்பு நிறுவன வலையமைப்பும் மொன்டானா பல்கலைக்கழகமும் இந்த விருதை வழங்கின. [3] இந்திய வனவிலங்கு அறக்கட்டளை இவரது நிலத்தை வட குறிப்பிட்டது. [1] 2020இல் பருவநிலை நெருக்கடியின் போது மாற்றத்தை உருவாக்கும் பன்னிரண்டு பெண்களில் வோக் இந்தியா என்ற மாதாந்திர இதழால் இவர் குறிப்பிடப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 "The need to bring both voices to the table". Tea & Coffee Trade Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  3. 3.0 3.1 3.2 Network, Wildlife Friendly Enterprise. "Nuxulbari Tea Estate Becomes 2nd Globally to Earn Elephant Friendly™ Certification". PRLog. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  4. Anantharaman, Aravinda (2020-03-07). "Women-led estates chart new terroir". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  5. 5.0 5.1 "These 12 women are crusaders of change in the midst of on-going climate crisis". Vogue India (in Indian English). 2020-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  6. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  7. "Ministry of Women & Child Development, Government of India". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  8. Singh, Kriti (2018-09-18). "Indian tea estate gets world's first 'elephant-friendly' tag". Asia Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_சப்பார்&oldid=3400280" இலிருந்து மீள்விக்கப்பட்டது