சோனியா கோகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hon'ble Ms. Chief Justice (Retd.)
சோனியா கிரிதர் கோகானி
குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
16 பெப்ரவரி 2023 – 25 பெப்ரவரி 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
தற்காலிக குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
13 பெப்ரவரி 2023 – 15 பெப்ரவரி 2023
நியமிப்புதிரௌபதி முர்மு
குசராத்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில்
17 பெப்ரவரி 2011 – 15 பெப்ரவரி 2023
பரிந்துரைப்புஎஸ். எச். கபாதியா
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 பெப்ரவரி 1961 (1961-02-26) (அகவை 63)
ஜாம்நகர்

சோனியா கிரிதர் கோகானி (பிறப்பு 26 பிப்ரவரி 1961) ஓர் இந்திய நீதிபதி. இவர் குசராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன்பு குசராத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

நீதிபதி சோனியா கோகானி 26 பிப்ரவரி 1961 அன்று குசராத்து, ஜாம்நகரில் பிறந்தார். நுண்ணுயிரியலில் இளம் அறிவியல் பயின்றார். பின்னர், இளங்கலைச் சட்டம் மற்றும் முதுகலைச் சட்டம் பயின்றார். [1]

ஜாம்நகரில் உள்ள கேபி சா சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1]

10 சூலை, 1995 இல் அகமதாபாத்தின் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். 2003 முதல் 2008 வரை குசராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். நடுவண் புலனாய்வுச் செயலக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். [1]

2008 இல், குசராத் உயர் நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்புத் துறைக்கான பதிவாளராக நியமிக்கப்பட்டார்.பின்னர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறையின் பதிவாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். [1] குசராத் மாநில நீதித்துறை அகாதமியிலும் கற்பித்தார். [1] 17 பிப்ரவரி 2011 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் 28 சனவரி 2013 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் [1] 13 பிப்ரவரி 2023 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 16 பிப்ரவரி 2023 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_கோகானி&oldid=3841963" இலிருந்து மீள்விக்கப்பட்டது