சோதி (தெய்வம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதி என அடையாளம் காட்டப்பட்ட முருகனின் வேல் இருக்கும் சிற்பம்

நவீன தமிழ் சைவ பாரம்பரியத்தில், சோதி என்னும் கொள்கை பெண்ணிய உருவகமாக கருதப்படுகிறது, இக்கடவுள் தமிழ் கடவுளான முருகனின் கையில் இருக்கும் வேலை பிரதிநிதித்துவப்படுத்தும் உருவகமாகும். மேலும் அவரின் தங்கையாக கருதப்படுகிறார். [1]

புராணம்[தொகு]

சோதி தேவியை அவரது பிறப்பின் அடிப்படையில் இரண்டு புராணக்கதைகள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

முதல் புராணக்கதையின் படி, இவர், இந்துக்கடவுளான சிவனின் நெற்றிக்கண்ணின் ஒளிவட்டத்திலிருந்து வெளிப்படும் சோதியாக, அவரின் மகளாக வெளிப்படுகிறார். [2]

இரண்டாவது புராணக்கதையின் படி, சிவனின் நெற்றியில் இருந்து வந்த ஆறு பொறிகளிலிருந்து, முருகன் எப்படி வந்தாரோ அதே போலவே, மற்றொரு இந்துக்கடவுளான பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வந்த ஒரு நெருப்புப்பொறியில் இருந்து இந்த சோதிக்கடவுள் வெளிவந்துள்ளார். பார்வதி தேவி தனது மகனான முருகனுக்கு அசுரன் சூரபத்மனை அழிக்க வேல் எனப்படும் ஆயுதமாக இத்தெய்வத்தை உருவாக்கியுள்ளார்.[3]

அவரின் அண்ணனான முருகனின் கோவில்கள் அனைத்திலும் உருவமற்ற அல்லது அரூப நிலையில் இக்கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அவரின் தந்தையான நடராஜா (சிவனின் ஒரு வடிவம்) கையில் வைத்திருக்கும் சுடர் என்றும் கருதப்படுகிறார். [3]

வழிபாடு[தொகு]

அகஸ்திய முனிவரின் முக்கிய பக்தி இயக்கமான சோடசத்தில், மனித உடலின் நெற்றியில் இருக்கும் அஜ்னா சக்கரத்தில் இருக்கும் அமர்ந்திருக்கும் அன்னை மனோன்மணி, அவரது கணவர் (சதாசிவ வடிவில் சிவன்) மற்றும் அவர்களது மகள் ஜோதி ஆகியோரின் முக்கியத்துவம் சந்திரனின் வளர்ச்சி மற்றும் குறைதல் எவ்வாறு மனித உடலை பாதிக்கும் என்பதை விளக்கியுள்ளார். மேலும் . 'ஓம்' என்ற பிரணவத் தத்துவத்திலிருந்து சோதி எவ்வாறு உருவாகிறது என்பதையும் இம்முனிவர் விவரித்துள்ளார்.

சோதிக்கடவுள் தன் சகோதரனுடன் இருப்பதால் சரவணப்பாவை என்றும் அழைக்கப்படுகிறாள், மேலும் பல முருகக் கோயில்களில் வேல் வடிவில் வழிபடப்படுகிறாள். இந்தியாவின் சில பகுதிகளில், அவர் வேத ராகாவுடன் தொடர்புடைய ராயாகி எனப்படும் தெய்வமாகவும் அடையாளம் காணப்படுகிறார். வட இந்தியாவில், அவள் ஜ்வாலைமுகி எனப்படும் தெய்வமாக அடையாளம் காணப்படுகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Diaspora of the Gods: Modern Hindu Temples in an Urban Middle-Class World. Oxford University Press, USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-515663-8. https://books.google.com/books?id=dHo8DwAAQBAJ&dq=goddess+jyoti+vel&pg=PA193. 
  2. "Daughters of Shiva". 9 December 2012.
  3. 3.0 3.1 "Skanda's Sister Jyoti". murugan.org."Skanda's Sister Jyoti". murugan.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதி_(தெய்வம்)&oldid=3917136" இலிருந்து மீள்விக்கப்பட்டது