சோடியம் பெர்போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பெர்போரேட்டு
ஒற்றை நீரேற்றில் பெர்போரேட்டு அலகு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பி.பி.எசு-1 (ஒற்றை), பி.பி.எசு-4 (நான்கு)
இனங்காட்டிகள்
7632-04-4 Y
10332-33-9 (ஒற்றை நீரேற்று) Y
10486-00-7 (நான்கு நீரேற்று) Y
ChEBI CHEBI:30178 Y
ChemSpider 4574023 Y
EC number 231-556-4
InChI
 • InChI=1S/B2H4O8.2Na/c3-1(4)7-9-2(5,6)10-8-1;;/h3-6H;;/q-2;2*+1 Y
  Key: JBUKJLNBQDQXLI-UHFFFAOYSA-N Y
 • InChI=1/B2H4O8.2Na/c3-1(4)7-9-2(5,6)10-8-1;;/h3-6H;;/q-2;2*+1
  Key: JBUKJLNBQDQXLI-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460514
வே.ந.வி.ப எண் SC7350000
SMILES
 • [Na+].[Na+].O[B-]1(OO[B-](O)(O)OO1)O
UNII Y52BK1W96C Y
UN number 1479
பண்புகள்
NaBO3•nH2O
வாய்ப்பாட்டு எடை 99.815 கி/மோல் (ஒற்றை நீரேற்று);
153.86 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் வெண்மையான தூள்
மணம் நெடியற்றது
உருகுநிலை 63 °C (145 °F; 336 K) (நான்கு நீரேற்று)
கொதிநிலை 130 முதல் 150 °C (266 முதல் 302 °F; 403 முதல் 423 K) (நான்கு நீரேற்று, சிதைவடையும்)
2.15 கி/100 மி.லி (நான்கு நீரேற்று, 18 °செ)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1046
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சோடியம் பெர்போரேட்டு (Sodium perborate) என்பது NaH2BO4, Na2H4B2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மிகச் சரியாக கூறுவதென்றால் இதன் வாய்ப்பாட்டை [Na+2•[B2O4(OH)4]2− என்று எழுத வேண்டும்.

பொதுவாக இச்சேர்மம் நீரிலி வடிவம் அல்லது அறுநீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. ஆனாலும் அழைக்கப்படும்பொது பொதுவாக ஒற்றை நீரேற்று அல்லது பி.ப்பி.எசு-1 மற்றும் டெட்ரா ஐதரேட்டு அல்லது பி.ப்பி.எசு-4 என்று அழைக்கப்படுகிறது. சோடியம் பெர்போரேட்டு (NaBO3) நீரிலி வடிவம் என்று முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு வடிவ சோடியம் பெர்போரேட்டுகளும் வெண்மை நிறங்கொண்டவை. நெடியற்றவையாகவும் நீரில் கரையக்கூடிய திண்மங்களாகவும் உள்ளன.

இந்த உப்பு பெராக்சைடு அடிப்படை வெளுப்பாக்கிகளில் ஒன்றாக சலவைத் தொழிலில் அழுக்குநீக்கியாகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

சோடியம் பெர்கார்பனேட்டையும் சோடியம் பெர்பாசுப்பேட்டையும் போல அல்லாமல் சோடியம் பெராக்சைடு ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்த சாதாரண ஒரு சேர்க்கைப் பொருளாக உருவாவதில்லை.[1]. மாறாக ஒவ்வொரு போரான் அணுவுடனும் இரண்டு ஐதராக்சி குழுக்கள் இணைந்த வளைய –B–O–O–B–O–O– உள்ளகத்தைக் கொண்ட பெர்போரேட்டு [(B(OH)2OO)2]2− ஈரெதிர்மின் அயனியைக் கொண்டுள்ளது. வளையம் நாற்காலி உறுதிப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது[2].

ஐதரேட்டுகள்[தொகு]

Na2H4B2O8•6H2O என்ற அறுநீரேற்றாக இச்சேர்மம் தண்ணீரிலிருந்தும் படிகமாகிறது. இதை Na2H16B2O14 அல்லது NaH8BO7.எனலாம். பொதுவாக காணப்படும் நீரிலி வடிவச் சொடியம் பெர்போரேட்டு சேர்மம் தவறுதலாக ஒற்றை நீரேற்று என்று அழைக்கப்படுகிறது. சரியாக முறைப்படுத்தி ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய Na2H4B2O8 அசலாக NaBO3•H2O என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல அறுநீரேற்றும் NaBO3•4H2O. என முறைப்படுத்தப்பட்டு வழக்கமாக நான்கு நீரேற்று என்று அழைக்கப்பட்டு வருகிறது [3]. இவ்விரண்டு வடிவங்களும் நெடியற்று வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டும் நீரில் கரைகின்றன. ஒற்றை நீரேற்றும் நான்கு நீரேற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த வடிவங்களாகும் [4].

வேதியியல்[தொகு]

நீருடன் தொடர்பு கொள்ளும்போது சோடியம் பெர்போரேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு போரேட்டையும் ஐதரசன் பெராக்சைடையும் கொடுக்கிறது[4] .

கரைசலில் வளைய எதிர்மின் அயனி துல்லியமாக இரண்டு எதிர்மின் அயனிகளாகப் [B(OH)3(OOH)]− பிரிகிறது. பின்னர் போரிக் அமிலத்துடன் சமநிலை அடைந்து ஐதரசன் பெராக்சைடு H2O2 இல் ஐதரோபெராக்சில் HOO− எதிர்மின் அயனி மற்றும் டெட்ரா ஐதராக்சிபோரேட்டு எதிர்மின் அயனி [B(OH)4]− எனப் பிரிகிறது:[3]

.

கரைசலின் செறிவு அதிகரிக்கும்போது பிற பெராக்சோபோரேட்டு இனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மிகையளவு H2O2,சேர்க்கப்படும்போது எதிர்மின் அயனிகள் [B(OH)2(OOH)2]−, [B(OH)(OOH)3]−, மற்றும் [B(OOH)4]− போன்றவை இறுதியாகத் தோன்றுகின்றன. போரேட்டு அடர்த்தி அதிகரிக்கும்போது குறைவான கரைதிறன் காரணமாக சோடியம் பெர்போரேட்டு ஈருருவ எதிர்மின் அயனியுடன் படிகமாகிறது.

தயாரிப்பு[தொகு]

போராக்சுடன் (Na2B4O7) சோடியம் ஐதராக்சைடு சேர்க்கப்பட்டு சோடியம் மெட்டாபோரேட்டு (NaBO2) உருவாக்கப்படுகிறது. பின்னர் இது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்து நீரேறியசோடியம் பெர்பொரேட்டு பெருமளவில் உருவாக்கப்படுகிறது:[4][5]

.

ஒரு பரப்புச் செயலியைச் சேர்ப்பதன் மூலம் படிகங்களின் அளவை கட்டுப்படுத்தலாம்[6][7].

பயன்கள்[தொகு]

சோடியம் பெர்போரேட் பல அழுக்கு நீக்கிகள், வெளுப்பாக்கிகள், சலவை மற்றும் துப்புரவு பொருட்களில் செயல்திற ஆக்சிசனின் நிலையான ஆதாரமாக செயல்படுகிறது[4]. இது சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் பிற குளோரின் அடிப்படையிலான வெளுப்பாக்கிகளை விட குறைவான தீவிரம் கொண்டுள்ளன. இதனால் சாயங்கள் மற்றும் நெசவுத் துணிகளுக்கு குறைந்த சீரழிவு ஏற்படுகிறது.

சோடியம் பெர்போரேட்டு 60° செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையில் ஆக்சிசனை விரைவாக வெளியிடுகிறது. 60° செல்சியசுக்கு குறைந்த வெப்பநிலையில் இதை செயல்திறன் மிக்கதாக மாற்ற இதனுடன் ஒரு பொருத்தமான இயக்கி கலக்கப்பட வேண்டும், இதற்காக பொதுவாக டெட்ரா அசிட்டைல் எத்திலீன்டையமீன் சேர்க்கப்படுகிறது.

பற்களுக்கான சில பல் வெளுக்கும் வாய்ப்பாடுகளில் சோடியம் பெர்போரேட்டு உள்ளது. இந்த சேர்மம் பல் வேரில் செருகப்பட்டு நீண்ட காலத்திற்கு அங்கேயே விடப்பட்டு பற்களில் பரவச் செய்யப் படுகிறது. உள்ளேயும் வெளியேயும் இருக்கும் கறைகளை வெளுக்கவும் அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது [8]. சோடியம் பெர்போரேட்டு கிருமி நாசினி பண்புகளையும் பெற்றுள்ளது. கண்களுக்கான சொட்டு மருந்துகள் சிலவற்றிலும் பகுதிப்பொருளாக இது இருக்கிறது.

கரிமத் தொகுப்பு வினைகளில் இது ஆக்சிசனேற்றும் முகவராகவும் பயன்படுகிறது. உதாரணமாக தயோயீத்தர்களை சல்பாக்சைடுகளாகவும் சல்போன்களாகவும் மாற்றுகிறது [9].

முன்பாதுகாப்பு[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்தில் சோடியம் பெர்போரேட்டு, பெரும்பாலான மற்ற போரேட்டுகளைப் போலவே, புற்றுநோய் பிறழ்வு அல்லது இனப்பெருக்கத்திற்கான நச்சு என்று வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சோடியம் பெர்போரேட்டின் பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அழகு சாதனப் பொருட்களில், எந்தவொரு செறிவிலும், 2010 டிசம்பர் 1 முதல் தானாகவே தடைசெய்யப்பட்டுள்ளது. இது பல் வெண்மைக்கு பயன்படுத்தப்படும் பெர்போரேட்டுகளின் பயன்பாட்டிற்கும் நீண்டுள்ளது [8].

மேற்கோள்கள்[தொகு]

 1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
 2. Carrondo, M. A. A. F. de C. T.; Skapski, A. C. (1978). "Refinement of the X-ray crystal structure of the industrial bleaching agent disodium tetrahydroxo-di-μ-peroxo-diborate hexahydrate, Na2[B2(O2)2(OH)4]•6H2O". Acta Crystallogr B 34: 3551. doi:10.1107/S0567740878011565. 
 3. 3.0 3.1 Alexander McKillop and William R Sanderson (1995): "Sodium perborate and sodium percarbonate: Cheap, safe and versatile oxidising agents for organic synthesis". Tetrahedron, volume 51, issue 22, pages 6145-6166. எஆசு:10.1016/0040-4020(95)00304-Q
 4. 4.0 4.1 4.2 4.3 B.J. Brotherton "Boron: Inorganic Chemistry" in Encyclopedia of Inorganic Chemistry (1994) Ed. R. Bruce King, John Wiley & Sons ISBN 0-471-93620-0
 5. "Sodium Perborate REACH Consortium" இம் மூலத்தில் இருந்து 2014-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426234530/http://www.perborates.eu/docs/PBS_SIP1010.pdf. பார்த்த நாள்: 2012-06-07. 
 6. J. Dugua and B.Simon (1978): "Crystallization of sodium perborate from aqueous solutions: I. Nucleation rates in pure solution and in presence of a surfactant". Journal of Crystal Growth, volume 44, issue 3, pages 265-279.எஆசு:10.1016/0022-0248(78)90025-8
 7. J. Dugua and B.Simon (1978): "Crystallization of sodium perborate from aqueous solutions: II. Growth kinetics of different faces in pure solution and in the presence of a surfactant". Journal of Crystal Growth, volume 44, issue 3, pages 280-286.எஆசு:10.1016/0022-0248(78)90026-X
 8. 8.0 8.1 Nature Inc. (2015): "Chemical used in beauty salon teeth whitening banned by EU". BDJ Team, volume 2, article 15075, 26 June 2015. எஆசு:10.1038/bdjteam.2015.75
 9. McKillop, Alexander; Kabalka, George W.; Reddy, Marepally Srinivasa (2008). "Sodium perborate". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X. 

புற இணைப்புகள்[தொகு]