சோகினி கர்-நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகினி கர்-நாராயண்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் கழகம்
மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
விருதுகள்பீட்டர் டே விருது (2023)
இணையதளம்
https://www.kar-narayan.msm.cam.ac.uk/

 

சோகினி கர்-நாராயண் (Sohini Kar-Narayan) ஓர் இங்கிலாந்து-இந்திய பொருட்கள் அறிவியலாளர் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஆற்றல் அறுவடைக்கான பாலிமர் அடிப்படையிலான பொருட்கள் குறித்து இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. இவருக்கு 2023ஆம் ஆண்டு வேதியியலுக்கான வேந்திய சங்க பீட்டர் டே பரிசு வழங்கப்பட்டது.

இளமையும் கல்வியும்[தொகு]

நைஜீரியாவில் பிறந்து வளர்ந்த கர்-நாராயண்[1] கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்காக இந்தியா வந்தார்.[2] இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பட்டதாரி மாணவி ஆவார்.[3] 2009-இல் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்கு இவர் டோரதி ஒட்ச்க்கின் சகாவாக இருந்தார்.[4]

ஆராய்ச்சியும் பணியும்[தொகு]

கர்-நாராயண் 2015-இல் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், பின்னர் 2018-இல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.[2] இவரது ஆராய்ச்சி உணர்திறன், உயிரியல் மருத்துவ பயன்பாடுகள் மற்றும் ஆற்றலுக்கான நானோ பொருட்களின் வளர்ச்சியைக் குறித்ததாகும்.[5][6] பைசோ மின்னணு நானோ மின்னாக்கிகளை உருவாக்க ஐரோப்பிய ஆராய்ச்சி குழு தொடக்க மானியம் இவருக்கு வழங்கப்பட்டது.[7]

Sohini Kar-Narayan (World Economic Forum, 2015)
சோகினி கர்-நாராயண் (உலகப் பொருளாதார மன்றம், 2015)

2022ஆம் ஆண்டில், கர்-நாராயணனுக்கு ஆர்மோரர்சு மற்றும் பிரேசியர்சு ஆர்டியோசென்சு திறவினை பரிசு வழங்கப்பட்டது. இது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறுவை சிகிச்சை உள்வைப்புகளைத் தொடர்ந்து தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பை வழங்க உதவும் திறன் உணர்வி ஆகும்.[8] கர்-நாராயண் நுண்நீர்ம விசை உணர்விகளை உருவாக்கினார். இது மென்மையான திசு சமநிலையை எளிதாக்குகிறது மற்றும் துல்லியமாக உள்வைப்புகளை வைக்க உதவுகிறது.[9] மருத்துவர்கள் பணிப்பாய்வுகளை மாற்றாமல் அறுவை சிகிச்சை செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அறுவைசிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து இந்த உணர்விகளை உருவாக்கினார்.[9][10]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • 2015 உலக பொருளாதார மன்ற இளம் அறிவியலாளர் விருது[11]
  • 2021 பொறியியல் துறையில் செல்வாக்கு மிக்க சிறந்த 50 பெண்கள்[12]
  • 2022 ஆர்மர்சு மற்றும் பிரேசியர்சு திறன் பரிசு[8]
  • 2022 பொருட்கள், தாதுக்கள் மற்றும் சுரங்க நிறுவன, சகா[4]
  • 2023 வேதியியலுக்கான வேந்திய சங்க பீட்டர் டே பரிசு[13]
  • 2023 ஐரோப்பிய ஆராய்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் மானியம்[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mukherjee, Arundhati (2021-10-11). "Engineering smart devices to tackle real-world problems" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. 2.0 2.1 Administrator (2012-03-26). "Professor Sohini Kar-Narayan" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  3. Sallows, Lianne (2016-07-28). "Sohini Kar-Narayan" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
  4. 4.0 4.1 IOM3. "Q&A – Prof Sohini Kar-Narayan FIMMM". www.iom3.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. "Sohini Kar-Narayan". The American Ceramic Society (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  6. "Sohini Kar-Narayan". scholar.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
  7. "Meet Sohini Kar-Narayan – An ERC grantee of Indian origin | EURAXESS". euraxess.ec.europa.eu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  8. 8.0 8.1 "Materials Science: Professor Sohini Kar-Narayan wins Armourers and Brasiers' Venture Prize". Clare Hall (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  9. 9.0 9.1 Scaramanga, Peter (2022-06-24). "PATIENTS EXPECTED TO BENEFIT FROM LONGER IMPLANT LIFETIMES AND REDUCED NEED FOR REVISION SURGERY |". Medgadget (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
  10. IOM3. "The sixth sense – a smarter move for hip implants". www.iom3.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. "Sohini Kar-Narayan" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  12. "Dr Sohini Kar-Narayan is named one of the WE50 2021" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  13. "Materials Chemistry mid-career prize: Peter Day Prize". Royal Society of Chemistry (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  14. "Materials Science: Professor Sohini Kar-Narayan awarded €2 million ERC Consolidator Grant". Clare Hall (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.

{Authority control}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகினி_கர்-நாராயண்&oldid=3886701" இலிருந்து மீள்விக்கப்பட்டது