சைலண்ட் ஸ்பிரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைலண்ட் ஸ்பிரிங் (Silent Spring) என்பது ராகல் கார்சனின் சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகம் ஆகும்.[1] 27 செப்டெம்பர் 1962 அன்று இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. பூச்சிக்கொல்லிகளின் கண்மூடித்தனமான பயன்பாடு சூழலில் தீங்கு விளைவிக்கும் வீரியத்தை இது ஆவணப்படுத்தியுள்ளது. வேதித் தொழிற்துறை தவறான தகவலை பரப்புவதாக கார்சன் குற்றம் சாட்டியதோடு, அரசுத்துறை அலுவலர்கள் தொழில்துறையின் சந்தைப்படுத்தல் விளம்பரங்களை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்வதற்காகவும் குற்றம் சாட்டினார்.

1950களின் பிற்பகுதியில், கார்சன் சுற்றுச்சூழலியல் அறம் சார்ந்து பணியாற்றத் தொடங்கினார். அதிலும், குறிப்பாக, வேதித் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளால் ஏற்படுத்தப்படுவதாக நம்பப்படும் சூழலியல் பிரச்சனைகள் குறித்து இவரது ஆய்வுப்பணி இருந்தது. இதன் விளைவாக சைலண்ட் இசுபிரிங் என்ற புத்தகம் எழுதப்பட்டது. இப்புத்தகம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்புத்தகம் வேதித்தொழிற்சாலைகளின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இருப்பினும், இப்புத்தகம் பொது மக்களின் எண்ணத்தை மாற்றியமைக்க உதவியதோடு, அமெரிக்க பூச்சிக்கொல்லிக் கொள்கையில் ஒரு மாற்றம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக தேசிய அளவில் டி.டி.டீ யை வேளாண் பயன்பாட்டில் தடை விதிக்கப்பட்டது.[2] மேலும், ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் உருவாவதற்கான காரணமாகவும் அமைந்தது.[3][4]


மேற்கோள்கள்[தொகு]

  1. McLaughlin, Dorothy. "Fooling with Nature: Silent Spring Revisited". Frontline. PBS. https://web.archive.org/web/20100310174306/http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/nature/disrupt/sspring.html from the original on மார்ச்சு 10, 2010. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 24, 2010. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "DDT". United States Environmental Protection Agency. Archived from the original on October 22, 2007. பார்க்கப்பட்ட நாள் November 4, 2007.
  3. Paull, John (2013) "The Rachel Carson Letters and the Making of Silent Spring" பரணிடப்பட்டது 2013-11-03 at the வந்தவழி இயந்திரம், SAGE Open, 3 (July):1–12.
  4. Josie Glausiusz. (2007), "Better Planet: Can A Maligned Pesticide Save Lives?" Discover Magazine. p. 34.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலண்ட்_ஸ்பிரிங்&oldid=3522887" இலிருந்து மீள்விக்கப்பட்டது