சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி
பிறப்புசூலை 4, 1968 (1968-07-04) (அகவை 52)
தேசியம்அயர்லாந்து[1]
இனம்பார்சி
கல்விBE, MS
படித்த கல்வி நிறுவனங்கள்இம்பீரியல் கல்லூரி லண்டன், லண்டன் வணிகப் பள்ளி
பணிடாட்டா சன்ஸ் நிறுவன துணைத் தலைவர்
பெற்றோர்பாலோன்ஜி மிஸ்ட்ரி
வாழ்க்கைத்
துணை
ரோஹிகா மிஸ்ட்ரி

சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி (Cyrus Pallonji Mistry, பிறப்பு சூலை 4, 1968) அயர்லாந்தின் வணிகர் பாலோன்ஜி மிஸ்ட்ரியின் கடைசி மகனாவார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் தலைவராகக் கூடியவராகவும் நவம்பர் 23, 2011 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.[2] இந்த நிறுவனத்தை இந்தியரல்லாதோர் ஒருவர் இவ்வாறு தலைமையேற்க விருப்பது முதல் முறையாகும்.[1]. மிஸ்ட்ரி தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டாவின் கீழ் துணைத்தலைவராக ஓராண்டுக் காலம் பணிபுரிந்தபின் திசம்பர் 2012 முதல் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.[3]. இம்பீரியல் கல்லூரி, லண்டனிலிருந்து குடிசார் பொறியியலில் பட்டம்பெற்ற பின்னர் லண்டன் வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தைத் தவிர சபூர்ஜி பாலோன்ஜி அண்ட் கோ, போர்ப்ஸ் கோகக், அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், யுனைடெட் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாண்மைக் குழுக்களில் இயக்குனராக உள்ளார்.

பதவி நீக்கம்[தொகு]

2012 இறுதியில் டாட்டா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவிற்கு அடுத்துப் பதவி ஏற்றார். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 அன்று அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தியக் குழுமங்களின் இடையில் இந்நிகழ்வு பெரும் அதிர்வை உண்டாக்கியது.[4]

மேற்கோள்கள்[தொகு]