சையத் உசேன் பில்கிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவாப் சையத் உசேன் பில்கிராமி (Syed Hussain Bilgrami), இமாத்-உல்-முல்க் பகதூர், (இந்திய நட்சத்திரத்தின் ஆணை) (1842-1926) [1] [2] [3] இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும், அரசியல்வாதியும் கல்வியாளரும் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் ஆரம்ப தலைவராகவும் இருந்தார். மேலும் இவர் முஸ்லீம் லீக்கின் முதல் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சையத் உசேன் பில்கிராமி 1844ஆம் ஆண்டில் கயாவில் சதாத்-இ-பில்கிராமின் மூதாதையர்கள் வழியில் பிறந்தார். மேலும் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1864இல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.

தொழில்[தொகு]

1866 முதல் 1873 வரை இலக்னோவின் கேனிங் கல்லூரியில் அரபு பேராசிரியர் பதவியை வகித்த பின்னர் இவர் ஐதராபாத் நிசாமின் சேவையில் நுழைந்தார். இவர் இறக்கும் வரை சர் சாலர் ஜங்கின் தனியார் செயலாளராக இருந்தார். சர் உசேன் பில்கிராமி தனது பதவிக் காலத்தில், இங்கிலாந்திற்கு ஒரு மறக்கமுடியாத பணிக்காக சர் சாலர் ஜங்குடன் சென்றார். அங்கு விக்டோரியா மகாராணியை சந்திப்பதற்கும் பேசுவதற்குமான ஆணையைப் பெற்றார். மேலும் பெஞ்சமின் டிஸ்ரேலி, வில்லியம் கிளாட்ஸ்டோன், லார்ட் சாலிஸ்பரி, ஜான் மோர்லி மற்றும் பலரையும் சந்தித்தார். [4]

பின்னர், ஐதராபாத் நிசாமின் தனிச் செயலாளராக பல பணிகளில் உடன் பணிபுரிந்தார். 1887 முதல் 1902 வரை நிசாமின் ஆதிக்கங்களுக்கான பொது அறிவுறுத்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1901-1902இல் இவர் 1902 இந்திய பல்கலைக்கழக ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். பின்னர், இவர் பிர்த்தன் ஏகாதிபத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் 1907 முதல் 1909 வரை மாநில அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக 1907இல் நிசாமின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். [5]

இவரது மிக முக்கியமான பணி ஒரு கல்வியாளரின் வேயாகும். நிசாம் கல்லூரியாக மாறவிருந்த நிறுவனத்தை இவர் நிறுவினார். இவர் 1885 ஆம் ஆண்டில் ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியையும் நிறுவினார். இது இந்தியாவில் இது போன்ற முதல் நிறுவனமாகும்.   உள்ளூர் தொழில்களின் மூன்று முக்கிய மையங்ளான அவுரங்காபாத், ஐதராபாத் மற்றும் வாரங்கல் ஆகிய இடங்களில் மூன்று தொழில்துறை பள்ளிகளை உருவாக்குவதில் (வீழ்ச்சியடைந்த தொழில்களை புதுப்பிக்க உதவுவதில்) இவர் முக்கிய பங்கு வகித்தார். மாநில நூலகமும் இவரால் தொடங்கப்பட்டது . [6]

இவர் தனது சேவைகளுக்காக, நவாப் அலி யர் கான் பகதூர், மோட்டமன் ஜங், இமாத்-உத்-டோவ்லா மற்றும் இமாத்-உல்-முல்க் ஆகிய பட்டங்களையும், பிரித்தானிய இராசியத்திற்கு இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசிடமிருந்து நட்சத்திர ஆணையையும் பெற்றுள்ளார். [4]

குறிப்புகள்[தொகு]