சையத் அர்சத் அலி
சையத் அர்சத் அலி | |
---|---|
பெசாவர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 சூன் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10-ஏப்ரல்-1971 (வயது 52) சுவாபி மாவட்டம் |
தேசியம் | பாக்கித்தானி |
சையத் அர்சத் அலி (Syed Arshad Ali) (பிறப்பு: ஏப்ரல் 10, 1971) ஒரு பாக்கித்தானிய நீதிபதி ஆவார். 2017 ஆம் ஆண்டு சூன் 16 ஆம் தேதி முதல் பெசாவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி சுவாபி மாவட்டத்தில் பிறந்தார். 1993 ஆம் ஆண்டு பெசாவர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய கைபர் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார். [1] [2]
நீதித்துறை வாழ்க்கை
[தொகு]1996 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2007 ஆம் ஆண்டு வரை, பெசாவரில் உள்ள ஒரு சட்ட நிறுவனமான "அப்ரிடி, சா மற்றும் மினல்லா" உடன் பணியாற்றினார். பின்னர், பெசாவரில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். "சையத் அர்சத் அலி மற்றும் அசோசியேட்சு" என்று பெயரிட்டார். 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேசனின் வாழ்நாள் உறுப்பினரானார். பெசாவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராகவும், பெசாவர் பார் அசோசியேசன், மாவட்ட நீதிமன்றங்களில் உறுப்பினராகவும் இருந்தார். ஒரு வழக்கறிஞராக, அவர் வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றார். பெசாவர் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி அன்று பணியில் சேர்ந்தார். [3] [4] 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று பெசாவர் உயர் நீதிமன்ற பெஞ்சில் நிரந்தர உறுப்பினரானார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mr. Justice Arshad Ali" (PDF). www.peshawarhighcourt.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
- ↑ Report, Bureau (June 17, 2017). "Three PHC additional judges take oath". DAWN.COM.
- ↑ "Mr. Justice Arshad Ali" (PDF). www.peshawarhighcourt.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019."Mr. Justice Arshad Ali" (PDF). www.peshawarhighcourt.gov.pk. Retrieved 31 December 2019.
- ↑ Report, Bureau (June 17, 2017). "Three PHC additional judges take oath". DAWN.COM.Report, Bureau (June 17, 2017). "Three PHC additional judges take oath". DAWN.COM.
- ↑ "Three PHC judges take oath | Pakistan Today". www.pakistantoday.com.pk.