சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்

சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோயில் என்பது சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. [1] இத்தலத்தினை வடதிருநாரையூர் என்று அழைத்துள்ளனர்.

இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் ஆகிய மரங்கள் உள்ளன. இதில் வன்னிமர வழிபாடு சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இக்கோயில் பிராமணர் தெருவில் அமைந்துள்ளது. சைதாப்பேட்டை காரணீசுவர் கோயிலிருந்து தெற்கு பகுதியில் உள்ளது.

இத்தலத்தின் மூலவர் சௌந்தரேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது.

நாரை பறவையானது இத்தலத்தின் மூலவரை வணங்கியமையால் இத்தலத்தினை வடநாரையூர் என்கின்றனர்.

திருப்பணிகள்[தொகு]

இச்சிவாலயத்தினை 12ம் நூற்றாண்டில் சதயன் என்பவர் கட்டினார். 15 மற்றும் 17 ம் நூற்றாண்டில் திருப்பணி நடைபெற்றுள்ளது.[2]

திருவிழாக்கள்[தொகு]

  • பிரதோசம்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=927&Cat=3
  2. அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில்