உள்ளடக்கத்துக்குச் செல்

சே நா சுப்ரமண்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சே நா சுப்ரமண்யன்
தொழில்தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குநர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்இலண்டன் பிசினஸ் ஸ்கூல்
துணைவர்திருமதி மீனா சுப்ரமண்யன்
பிள்ளைகள்2

சேகரிபுரம் நாராயணன் சுப்ரமண்யன் (S. N. Subramayan) (பிறப்பு: மார்ச் 16, 1960) லார்சன் & டூப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். அவர் 1 ஜூலை 2017 அன்று திரு அனில் மணிபாய் நாயக்கிடமிருந்து இந்த நிர்வாகத்தைப் பெற்றார்.[1] சே நா சுப்பிரமணியன் மேலும் எல் டி ஐ மற்றும் எல் & டி தொழில்நுட்ப சேவைகள், எல் & டி மெட்ரோ (ஐதராபாத்) இரயில் வாரியங்களின் செயல் அல்லாத தலைவர் ஆகிய பதவிகளை வகித்ததோடு இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒப்பந்த சேவைகள் மூலம் பணிக்கமர்த்தும் நிறுவனமான மைண்ட்ட்ரீயின் துணைத்தலைவர் பதவியை மார்ச் 2019 அன்று வாய்க்கப்பெற்றார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்த சே நா சுப்ரமணியனின் தந்தை மறைந்த ஸ்ரீ எஸ்.எஸ்.நாராயணன் இந்திய ரயில்வேயில் பொது மேலாளராக இருந்தார். சென்னையில் உள்ள மயிலாப்பூர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 1982 ஆம் ஆண்டில் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் குருக்ஷேத்ரா (தற்போது என்ஐடி-குருக்ஷேத்ரா) மண்டல பொறியியல் கல்லூரியில் கட்டுமானத் துறைப் பொறியியலில் பட்டம் பெற்றார்.

பூனாவின் புனே பல்கலைக்கழகத்தின் சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்தார், அதைத் தொடர்ந்து இலண்டன் பிசினஸ் ஸ்கூலில் இருந்து நிர்வாக மேலாண்மை நிகழ்வுத் திட்டமும் நடைபெற்றது.

தொழில்

[தொகு]

சே. நா. சுப்ரமண்யன் 1984 ஆம் ஆண்டில் லார்சன் & டூப்ரோவின் ஈ.சி.சி பிரிவில் சேர்ந்தார், மேலும் சேயூர் ராமசாமி ராமகிருஷ்ணன் (முன்னாள் இணை நிர்வாக இயக்குநர், எல் அண்ட் டி), ராமகிருஷ்ணா (முன்னாள் தலைவர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர், எல் அண்ட் டி) மற்றும் கே.வி.ரங்கசாமி (முன்னாள் தலைவர், ஈ.சி.சி. ) ஆகியோருடன் பணியாற்றத் தொடங்கினார்.[2]

சூலை 2011 இல், சே. நா. சுப்ரமண்யன் எல் அண்ட் டி வாரியத்தில் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டு வாரியத்தின் உறுப்பினராகவும், மூத்த நிர்வாக துணைத் தலைவராகவும் (கட்டுமானம்) நியமிக்கப்பட்டார்.[2] அக்டோபர் 2015 இல், அவர் எல் அண்ட் டி துணை நிர்வாக இயக்குநராகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் லார்சன் & டூப்ரோவின் (எல் அண்ட் டி) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் பதவி உயர்வு பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சே. நா. சுப்ரமண்யன் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரியும் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலிருந்து தங்கப் பதக்கம் வென்ற திருமதி மீனா சுப்ரமண்யனை மணந்தார். இந்த தம்பதியருக்கு சுஜய் மற்றும் சூரஜ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் கிரிக்கெட்டிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Will speak less and work more, says S N Subrahmanyan". Business Standard India. 2017-04-07. https://www.business-standard.com/article/companies/will-speak-less-and-work-more-says-s-n-subrahmanyan-117040701558_1.html. 
  2. 2.0 2.1 "SN Subrahmanyan to lead L&T from today" (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "SN Subrahmanyan to lead L&T from today". Archived from the original on 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே_நா_சுப்ரமண்யன்&oldid=4161491" இலிருந்து மீள்விக்கப்பட்டது