சேற்றுமுட்டி செல்லியாயி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேற்றுமுட்டி செல்லியாயி கோயில் அல்லது சேத்துமுட்டி செல்லியாயி கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் என்னும் கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக் கோயில் தெய்வத்தை 'சேத்துமுட்டி செல்லியாயி' என்று குறிப்பிடுகின்றனர். தற்போது செல்லாண்டியம்மன் கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் இக் கோயிலில் திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவின் போது இத் தெய்வத்தின் அடியவர்கள் "முட்டி" என்ற சிறிய மண்சட்டியுடன் ஏரியில் நீராடி, சிறிதளவுச் சேற்றை அள்ளி அம் முட்டியிலும், உடலிலும் பூசிக்கொண்டு, கோயிலை மூன்றுமுறை சுற்றிய பிறகு கோயிலின் அருகில் உள்ள மரத்தின்மேல் அம் முட்டியைப் போட்டு உடைப்பது வழக்கம்.[1]

மேற்கோள்கள்[தொகு]