சேரநெல்லூர் வனதுர்க்கை காவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரநெல்லூர் வனதுர்க்கை காவு இந்தியாவில் கேரள மாநிலததில் எர்ணாகுளம் மாவட்டத்தில் சேரநெல்லூர் பகவதி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மாத்திரிப்பிள்ளை குடும்பத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு இந்து கோயிலாகும். [1] 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். நாகர் கோயிலான 'சர்ப்ப காவு'வுடன் இது தொடர்புடையதாகும். இக்கோயிலில் பத்ரகாளி சன்னதியும் உள்ளது.

பூசைகள்[தொகு]

மலையாள நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் முதல் நாள், முதல் வெள்ளி, கடைசி செவ்வாய் மற்றும் ' ரேவதி ' நட்சத்திர நாள் ஆகிய நாள்களில் சேரநெல்லூர் வனதுர்க்கை காவுவில் பூசைகள் நடத்தப்பெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]