சேந்தோசெனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேந்தோசெனைட்டு
Xanthoxenite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa4Fe3+2(PO4)4(OH)2·3H2O
இனங்காணல்
மோலார் நிறை739.95 கி/மோல்
நிறம்வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு மஞ்சள்
படிக இயல்புதட்டையான படிகங்களாகவும் மடிப்புநிலை திரட்டுகளாகவும் மேலோடுகளாகவும் தோன்றுகிறது.
படிக அமைப்புமுச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {010}
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுமங்கலான மண் போன்றது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி2.97 அளக்கப்பட்டது, 3.38 கணக்கிடப்பட்டது
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.704 nβ = 1.715 nγ = 1.724
மேற்கோள்கள்[1][2][3]

சேந்தோசெனைட்டு (Xanthoxenite) என்பது Ca4Fe3+2(PO4)4(OH)2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். சேந்தோசெனைட்டு கனிமம் வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு கலந்த மஞ்சள் வரையிலான நிறங்களில் மண் போன்ற மேலேடாக மரச்சிரால் வடிவ படிகங்களாகத் தோன்றுகிறது. இப்படிகங்கள் முச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாகின்றன. தீப்பாறைகளில் முப்பைலைட்டு என்ற கனிமத்தின் மாற்றுக் கனிமமாக இது தோன்றுகிறது.[3] அப்படைட்டு, வொய்ட்லாக்கைட்டு, சில்ட்ரனைட்டு, இயோசுபோரைட்டு, இலாயிட்டு, சுட்ரன்சைட்டு, சிடீவர்டைட்டு, மிட்ரிதாடைட்டு, ஆம்பிளைகோனைட்டு மற்றும் சிடரைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்த நிலையில் சேந்தோசெனைட்டு கிடைக்கிறது.[2]

ஆத்திரேலியா, பிரேசில், போர்த்துகல், எசுப்பானியா, உக்ரைன், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் சேந்தோசெனைட்டு கனிமம் கிடைக்கிறது. முதன் முதலில் 1920 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஆம்ப்சையர் மாநிலத்திலுள்ள கிராப்டன் மாகாணத்தின் குரோட்டன் நகரத்தில் சேந்தோசெனைட்டு கண்டறியப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தோசெனைட்டு&oldid=3775223" இலிருந்து மீள்விக்கப்பட்டது