சேண்டுசுபிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேண்டுசுபிட் கடற்கரை, கராச்சி

சேண்டுசுபிட் (Sandspit) என்பது பாக்கித்தானிலுள்ள ஒரு கடற்கரை ஆகும். இக்கடற்கரை பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கராச்சிக்கு தென் மேற்கில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாகும்.

பல்வேறு வகையான கடல் வாழ் பாசி உயிரினங்களும், நண்டுகளும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள ஆழமற்ற நீர் நீச்சல் மற்றும் சூரிய குளியலுக்கு ஏற்றதாக உள்ளது. இங்கு அசாதாரண பாறை உருவாக்கத் தோற்றங்கள் காணப்படுகின்றன. ஓய்வெடுக்கவும் அடிக்கடி சென்று காற்று வாங்கவும் வசதியாக கராச்சியில் உள்ள ஒரு பொழுது போக்கிடமாக இக்கடற்கரை கருதப்படுகிறது. ஒட்டக சவாரிக்கும் குதிரை சவாரிக்கும் இந்தக் கடற்கரை வசதியாக உள்ளது [1].

கடந்த இருபது ஆண்டுகளாக சிந்து மாகாண வனவிலங்குத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பச்சை மற்றும் ஆலிவ் ஆமைகள் கூடு கட்டுமிடமாக இக்கடற்கரை திகழ்கிறது. குளிர்கால மாதங்களின் தொடக்கத்தில் கூடு கட்டுதல் இங்கு நடக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அமைப்பும் – பாக்கித்தானும் சேண்டுசுபிட் கடற்கரையில் ஆமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக இக்கடற்கரையில் வெதுவெதுப்பான நிலப்பகுதி மையத்தை அமைத்து ஆமைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேண்டுசுபிட்&oldid=2750125" இருந்து மீள்விக்கப்பட்டது