சேசம்பட்டி சிவலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேசம்பட்டி சிவலிங்கம் (பிறப்பு: 7 ஜுலை 1944) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1].

இசைப் பயிற்சி[தொகு]

நாதசுவரம் வாசித்தலில் ஆரம்பகாலப் பயிற்சியினை தனது தந்தையார் சேசம்பட்டி பி. தீர்த்தகிரியிடம் பெற்றார். பின்னர் கீவளுர் கணேசன், கீரனூர் ராமசுவாமி பிள்ளை ஆகியோரின் மாணவராக இசைக் கற்றார். டி. எஸ். லட்சப்பப் பிள்ளை, டி. என். கிருஷ்ணன், எம். தியாகராஜன், கே. வி. நாராயணசுவாமி ஆகிய புகழ்பெற்ற கலைஞர்களின் தொடர்பினால் தன்னுடைய இசைத்திறனை மேம்படுத்திக் கொண்டார்.

இசைப் பணி[தொகு]

அனைத்திந்திய வானொலியில் ‘A' தரக் கலைஞராக 40 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பெற்றுள்ள விருதுகளும், பட்டங்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Call of the nagaswaram
  2. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 

உசாத்துணை[தொகு]