செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலீனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலீனேட்டு
வேறு பெயர்கள்
selenate ion
இனங்காட்டிகள்
14124-68-6 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26473
SMILES
  • [O-][Se+2]([O-])([O-])[O-]
UNII 6X37R1DB70 Y
பண்புகள்
SeO2−
4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

செலீனேட்டு (Selenate) என்பது SeO2−
4
என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும்.[1]

செலீனேட்டுகள் சல்பேட்டுகளுக்கு ஒப்பானவையாகவும் ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்டவையாகவும் உள்ளன. சுற்றுப்புற வெப்பநிலையில் நீர்த்த கரைசல்களில் அதிகம் கரைகின்றன.[2]

சல்பேட்டை போலல்லாமல், செலீனேட்டு ஓரளவு நல்ல ஆக்சிசனேற்றியாகும்; செலினைட்டு அல்லது செலினியமாக இதை குறைக்கலாம். இது செலீனிக்கு அமிலம் H2SeO4 உடன் ஒத்திருக்கிறது. ஒரு வலுவான அமிலமான இது அதன் செறிவூட்டப்பட்ட அடர் நிலையில் தங்கத்தை கரைக்கும்.[3]

செலீனியம் தனிமம் பல இணைதிறன் நிலைகளை வெளிப்படுத்துகிறது. செலீனேட்டு குறைந்த அளவு குறைக்கப்பட்ட அயனியாகும்.[4] இதைத் தொடர்ந்து செலீனைட்டும் தனிம செலீனியமும் குறைக்கப்படுகின்றன. தனிமநிலை செலீனியத்தை விட செலீனைடு மிகவும் குறைவாகவே ஒடுக்கப்படுகிறது.[5] செலீனியத்தின் நச்சுத்தன்மைக்கு இணைதிறன் நிலையும் ஒரு முக்கிய காரணியாகும். செலீனேட்டு நுண்ணூட்டச் சத்தாக செலீனியம் தேவைப்படும் உயிரினங்களுக்குத் தேவையான ஒரு வடிவமாகும். இந்த உயிரினங்கள் செலீனியத்தை பெறுகின்ற, வளர்சிதை மாற்றம் செய்கின்ற மற்றும் வெளியேற்றுகின்ற திறனைக் கொண்டுள்ளன. செலீனியம் நச்சுத்தன்மையுடையதாக மாறும் நிலை இனங்களுக்கு இனம் மாறுபடும். pH மற்றும் காரத்தன்மை போன்ற பிற சுற்றுச்சூழல் காரணிகள் செலீனேட்டு மற்றும் செலீனைட்டின் செறிவுடன் தொடர்புடையனவாக உள்ளன.[6]

பழங்கால கடல்கள் ஆவியாகிய பகுதிகளில் செலினேட்டு மற்றும் செலீனியத்தின் பிற வடிவங்கள் அதிகமாக உள்ளன. இந்த பகுதிகள் செலீனியத்தால் செறிவூட்டப்பட்டு இங்கெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரியல் தழுவலும் நிகழ்ந்துள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wickleder, Mathias S. (2005-01-01), Gschneidner, Karl A.; Bünzli, Jean-Claude G.; Pecharsky, Vitalij K. (eds.), Chapter 224 - Oxo-Selenates of rare earth elements, Handbook on the Physics and Chemistry of Rare Earths (in ஆங்கிலம்), vol. 35, Elsevier, pp. 45–105, doi:10.1016/S0168-1273(05)35002-1, ISBN 9780444520289, பார்க்கப்பட்ட நாள் 2023-01-03
  2. Jegadeesan, G.; Mondal, K.; Lalvani, S. B. (May 11, 2010). "Selenate removal from sulfate containing aqueous solutions". Environmental Technology 26 (10): 1181–1187. doi:10.1080/09593332608618475. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-3330. பப்மெட்:16342540. https://pubmed.ncbi.nlm.nih.gov/16342540/. 
  3. Sarathchandra, S. U.; Watkinson, J. H. (1981-02-06). "Oxidation of elemental selenium to selenite by Bacillus megaterium". Science 211 (4482): 600–601. doi:10.1126/science.6779378. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:6779378. Bibcode: 1981Sci...211..600S. https://pubmed.ncbi.nlm.nih.gov/6779378/. 
  4. Mangiapane, Erika; Pessione, Alessandro; Pessione, Enrica (2014). "Selenium and selenoproteins: an overview on different biological systems". Current Protein & Peptide Science 15 (6): 598–607. doi:10.2174/1389203715666140608151134. பன்னாட்டுத் தர தொடர் எண்:1875-5550. பப்மெட்:24910086. https://pubmed.ncbi.nlm.nih.gov/24910086/. 
  5. Tan, Lea Chua; Nancharaiah, Yarlagadda V.; van Hullebusch, Eric D.; Lens, Piet N. L. (2016). "Selenium: environmental significance, pollution, and biological treatment technologies". Biotechnology Advances 34 (5): 886–907. doi:10.1016/j.biotechadv.2016.05.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-1899. பப்மெட்:27235190. https://pubmed.ncbi.nlm.nih.gov/27235190/. 
  6. Xie, Lingtian; Wu, Xing; Chen, Hongxing; Dong, Wu; Cazan, Alfy Morales; Klerks, Paul L. (2016). "A low level of dietary selenium has both beneficial and toxic effects and is protective against Cd-toxicity in the least killifish Heterandria formosa". Chemosphere 161: 358–364. doi:10.1016/j.chemosphere.2016.07.035. பன்னாட்டுத் தர தொடர் எண்:1879-1298. பப்மெட்:27448316. Bibcode: 2016Chmsp.161..358X. https://pubmed.ncbi.nlm.nih.gov/27448316/. 
  7. Domokos-Szabolcsy, Éva; Fári, Miklós; Márton, László; Czakó, Mihály; Veres, Szilvia; Elhawat, Nevien; Antal, Gabriella; El-Ramady, Hassan et al. (2018-09-08). "Selenate tolerance and selenium hyperaccumulation in the monocot giant reed (Arundo donax), a biomass crop plant with phytoremediation potential". Environmental Science and Pollution Research International 25 (31): 31368–31380. doi:10.1007/s11356-018-3127-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1614-7499. பப்மெட்:30196460. Bibcode: 2018ESPR...2531368D. https://pubmed.ncbi.nlm.nih.gov/30196460/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனேட்டு&oldid=3862382" இலிருந்து மீள்விக்கப்பட்டது