செலினியன் உச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலினியன் உச்சி (Selenean summit) நிலாவின் மேலுள்ள உயர்ந்த புள்ளியைக் குறிக்கிறது. பூமிக்கு எவரெசுட்டு சிகரம் எப்படி உயர்ந்த புள்ளியோ அதேபோல நிலாவுக்கு உயர்ந்த புள்ளி செலினியன் உச்சியாகும்.

எங்கெல்கார்ட்டு என்ற விண்கல் வீழ் பள்ளத்தின் விளிம்பில் உள்ள செலினியம் உச்சிக்கு செல்லும் ஓவியனின் அணுகுமுறை
அப்பல்லோ 11 விண்கலத்திலிருந்து எங்கல்கார்ட்டின் விளிம்பை நோக்கி கிழக்கு நோக்கி இருக்கும் சிறு புகைப்படம், செலினியம் உச்சியை

நிலா மேற்பரப்பின் சராசரி உயரத்திற்கு மேல் சுமார் 10,786 மீ (35,387 அடி) உயரம் கொண்டதாக இவ்வுச்சி அமைந்துள்ளது. பூமியுடன் ஒப்பிடுகையில் இது பூமியின் மிக உயர்ந்த புள்ளியான எவரெசுட்டை விட கிட்டத்தட்ட இருபது சதவீதம் 'உயரமாக' உள்ளதாக கணக்கிடப்படுகிறது. செலினியன் உச்சி நிலாவிலுள்ள எங்கெல்கார்ட்டு என்ற விண்கல் வீழ் பள்ளத்தின் வடகிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. நிலாவுக்கு கடல் மட்டம் இல்லை என்பது போன்ற அளவீட்டு முறைகள் ஓரளவு வேறுபட்டாலும், நாசாவின் நிலா உளவு சுற்றுக்கலன் குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து, நிலாவின் மேற்பரப்பில் செலினியன் உச்சிக்காக கூறப்பட்ட உயர அளவீடுகள் வேறு எங்கும் மிஞ்சவில்லை.[1] செலினியன் உச்சிக்கான தோராயமான ஆயத்தொகுதிகள் நிலாவின் 5.4125°வடக்கு 158.6335°மேற்கு என்று அறியப்படுகிறது.[2]

பூமியிலிருந்து பார்த்தால் தெரியாமல் இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் செலினியன் உச்சி அமைந்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Page, Lewis (29 October 2010). "Highest point on the Moon found: Higher than Mount Everest". theregister.co.uk. The Register. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
  2. "Highest Point on the Moon". NASA. 2010-10-27. Archived from the original on 2015-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலினியன்_உச்சி&oldid=3781935" இலிருந்து மீள்விக்கப்பட்டது