செலாடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலாடோனைப் பயன்படுத்துதல்
இலண்டன் கிரீன்விச்சின் கிரீன்விச்சு ராயல் வானாய்வகத்தில் மேத்யூ டாக்ரேயின் செலாடோன்.

செலாடோன்(Celatone) என்பது பூமியின் மீது செல்லும் தீர்க்கரேகையை அறிவதற்காக வியாழன் கோளின் நிலவுகளை உற்றுநோக்க கலீலியோ கலிலியால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். ஒரு தலைக்கவசத்தின் வடிவத்தைப் போல, அத்தலைக்கவசத்தில் கண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொலை நோக்கியைப் பொருத்தி இக்கருவி உருவாக்கப்பட்டிருந்தது.

நவீன வடிவம்[தொகு]

2013 ஆம் ஆண்டில் மேத்யூ டாக்ரே செலாடோனின் சரியான பிரதியை படைத்தார். சாமுவேல் பார்லர் எழுதிவைத்திருந்த பதிப்புக் குறிப்புகளின் அடிப்படையில் இவர் அதை உருவாக்கினார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சனவரி வரை டாக்ரேயின் செலாடோன் இலண்டனின் கிரீன்விச்சிலுள்ள கிரீன்விச்சு வானாய்வகத்தில் காட்சி படுத்தப்பட்டிருந்தது

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலாடோன்&oldid=2750013" இலிருந்து மீள்விக்கப்பட்டது