செர்சி டெப்லோகோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செர்சி அலெக்சாண்ட்ரோவிச் டெப்லோகோவ் (Sergei Aleksandrovich Teploukhov) ( உருசியம்: Серге́й Алекса́ндрович Теплоу́хов) சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1888 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் தேதியன்று பிறந்தார். 1920 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை, டெப்லோகோவ் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் பல்வேறு காலகட்டங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டார். தெற்கு சைபீரியாவின் தொல்பொருள் கலாச்சாரங்களின் வகைப்பாட்டை முதலில் வகுத்தவர் இவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தேசியவாதத்தின் சந்தேகத்தின் பேரில் டெப்லோகோவ் கைது செய்யப்பட்டார். மேலும் 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று அவரது அறையில் இறந்து கிடந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்சி_டெப்லோகோவ்&oldid=3876085" இலிருந்து மீள்விக்கப்பட்டது