செரின் (இரசாயன ஆயுதம் )
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(RS)-Propan-2-yl methylphosphonofluoridate | |
வேறு பெயர்கள்
(RS)-O-Isopropyl methylphosphonofluoridate; IMPF;
GB;[2] 2-(Fluoro-methylphosphoryl)oxypropane; Phosphonofluoridic acid, P-methyl-, 1-methylethyl ester | |
இனங்காட்டிகள் | |
107-44-8 ![]() | |
ChEBI | CHEBI:75701 ![]() |
ChEMBL | ChEMBL509554 ![]() |
ChemSpider | 7583 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7871 |
SMILES
| |
UNII | B4XG72QGFM ![]() |
பண்புகள் | |
C4H10FO2P | |
வாய்ப்பாட்டு எடை | 140.09 g·mol−1 |
தோற்றம் | தெளிந்த நிறமற்ற திரவம், தூய்மையற்ற நிலையில் பழுப்பு நிறம் |
மணம் | தூய வடிவத்தில் மணமற்றது. தூய்மையற்ற நிலையில் கடுகு அல்லது எரிந்த ரப்பர் போன்ற வாசனை. |
அடர்த்தி | 1.0887 கி/செமீ3 (25 °C) 1.102 கி/செமீ3 (20 °C) |
உருகுநிலை | |
கொதிநிலை | 158 °C (316 °F; 431 K) |
கலக்குமியபுடையது | |
மட. P | 0.30 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | மரணத்தை ஏற்படுத்தும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Lethal Nerve Agent Sarin (GB) |
ஈயூ வகைப்பாடு | மிகுந்த நச்சுத்தன்மை (T+)[3] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
550 μg/kg (rat, oral)[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
செரின் (Sarin) என்பது அதிக விசத்தன்மை கொண்ட செயற்கை ஆர்கனோபாஸ்பரஸ் கலவை.[5] நிறமற்ற, மணமற்ற இத்திரவம் இரசாயன ஆயுதமாக பயன்படுத்தக் காரணம் இவை நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஆகும். நேரடியாக சுவாசிக்கையில் நுரையீரல் தசைகளை செயலிழக்கச் செய்து ஒன்றில் இருந்து பத்து நிமிடத்திற்குள் இறப்பை உண்டாக்கக் கூடியது.[6][7] பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதமாகக் கருதப்படுகிறது. 1993 இரசாயன ஆயுத ஒப்பந்தத்தின் படி 1997-ம் ஆண்டில் இருந்து இதன் உற்பத்தி மற்றும் சேமிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பாதிப்புகள்[தொகு]
பொதுவாகச் சுவாசத்தில் ஈடுபடும் தசைகளைக் கட்டுப்பாடு இழக்கச் செய்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயரிழக்கச் செய்கிறது. ஆரம்பத்தில் மூக்கில் நீர்வடிதல், நெஞ்சு இறுக்கம், கருவிழி சுருங்குதல் போன்றவை ஏற்படுகிறது. பிறகு உடல் செயற்பாடுகள் கட்டுப்பாடு இழப்பதால் வாந்தி ஏற்படுதல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் ஏற்படலாம்.
விசத் தன்மை[தொகு]
தூய நிலையில் உள்ள செரின் சயினைடை விட 26 மடங்கு கொடியது என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. பிற இரசாயனங்களுடனான ஒப்பீடு பின்வருமாறு
ஹைட்ரஜன் சயனைடு விட 81 மடங்கு கொடியது.
பாஸ்ஜின் விட 43 மடங்கு கொடியது.
சல்பர் மஸ்டர்ட் விட 28 மடங்கு கொடியது.
குளோரின் விட 543 மடங்கு கொடியது.
வரலாறு[தொகு]
1938ம் ஆண்டு ஜெர்மனி விஞ்ஞானி ஐ.ஜி.ஃபார்பன் ஒரு கொடிய பூச்சிக்கொல்லியை உருவாக்கும் போது இதனை கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து டபுன் (TABUN) என்கிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே செரின் ஆகும். இதற்கு செரின் எனப் பெயர் வரக் காரணம் இதனை உருவாக்கிய விஞ்ஞானிகளான ஸ்க்ரேடர் (S), ஆம்புரோஸ் (A), ரிட்டர் (R), லின்டே (IN) ஆகியோரின் பெயர் சுருக்கம் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Material Safety Data Sheet -- Lethal Nerve Agent Sarin (GB)". 103d Congress, 2d Session. United States Senate. May 25, 1994. November 6, 2004 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sarin". National Institute of Standards and Technology. March 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Institut für Arbeitsschutz der Deutschen Gesetzlichen". GESTIS Substance Database. ஜனவரி 20, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 15, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chambers, Michael. "ChemIDplus - 107-44-8 - DYAHQFWOVKZOOW-UHFFFAOYSA-N - Sarin - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.sis.nlm.nih.gov.
- ↑ Sarin (GB). Emergency Response Safety and Health Database. National Institute for Occupational Safety and Health. Accessed April 20, 2009.
- ↑ Kenneth Anderson (September 17, 2013). A Poisonous Affair: America, Iraq, and the Gassing of Halabja review of A Poisonous Affair: America, Iraq, and the Gassing of Halabja by Joost R. Hiltermann (Cambridge UP 2007). Lawfare: Hard National Security Choices (Report). December 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
... death can occur within one minute of direct inhalation as the lung muscles are paralyzed.
- ↑ Michael Smith (August 26, 2002). "Saddam to be target of Britain's 'E-bomb'". த டெயிலி டெலிகிராப்: p. A18. https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/1405440/Saddam-to-be-target-of-Britains-E-bomb.html. பார்த்த நாள்: December 30, 2015. "The nerve agents Sarin and VX. Colourless and tasteless, they cause death by respiratory arrest in one to 15 minutes."