செய்யாறு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யாறு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (Govt Girls higher secondary school, cheyyar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ளது. பள்ளி 1969 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மற்றும் அவர் துணைவியார் தயாளு அம்மாள் ஆகியோரால் துவங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாதிரிப் பள்ளியாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் தற்போது 2500 மாணவிகளும் 70 ஆசிரிய ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர்.[1] ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இங்கு கற்பிக்கப்படுகிறது.[2][3]

பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்[தொகு]

  • நாட்டு நலப்பணித்திட்டம்
  • சாரண சாரணியர் இயக்கம்
  • சுற்றுச்சூழல் மன்றம்
  • பசுமைப்படை
  • செஞ்சிலுவை சங்கம்

நாட்டு நலப்பணித்திட்டம்[தொகு]

நாட்டுநலப்பணித்திட்டம் 2000-ம் ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்டது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவியர் இணைந்துள்ளனர்.

சாரண சாரணியர் இயக்கம்[தொகு]

சாரண சாரணியர் இயக்கம் 1987 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. சுமார் 120 மாணவிகள் இந்த இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்கம்[தொகு]

செஞ்சிலுவை சங்கம் 1984-ம் ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்டது. ஏறத்தாழ 400 மாணவர்கள் செயலாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மலர், மாலை (2023-07-29), "அரசு மாதிரி மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள்கள்", www.maalaimalar.com, பார்க்கப்பட்ட நாள் 2024-01-26
  2. "செய்யாறு மாணவி மின்னலாதேவி மாநில அளவில் முதலிடம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/may/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-357754.html. பார்த்த நாள்: 26 January 2024. 
  3. "விவசாயி, தொழிலாளியின் மகள்கள்... செய்யாறு அரசு மாதிரி பள்ளி மாணவிகள் 6 பேருக்கு மருத்துக் கல்லுரிகளில் இடம்", Hindu Tamil Thisai, 2022-01-29, பார்க்கப்பட்ட நாள் 2024-01-26