செயின்ட் எலியெர்
செயின்ட் எலியெர் | |||
---|---|---|---|
யேர்சி மாவட்டம் (பாரிஷ்) | |||
![]() செயின்ட் ஆபின் விரிகுடாவின் மேற்கிலிருந்து காண்கையில் செயின்ட் எலியெரின் காட்சி | |||
| |||
அரசி சார்பு ஆட்புலம் | யேர்சி, கால்வாய் தீவுகள் | ||
அரசு[1] | |||
• மாவட்டத் தலைவர் (கொன்னெடேபில்) | சைமன் குரோபோர்டு | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 10.6 km2 (4.1 sq mi) | ||
பரப்பளவு தரவரிசை | 5வது | ||
மக்கள்தொகை (2011) | |||
• மொத்தம் | 33,622 | ||
• அடர்த்தி | 3,200/km2 (8,200/sq mi) | ||
நேர வலயம் | கீ.இ.நே | ||
• கோடை (பசேநே) | UTC+01 (ஒசநே) | ||
மாவட்ட அஞ்சல்குறி | JE2 | ||
அஞ்சல் பகுதி | 3 & 4 | ||
இணையதளம் | www.sthelier.je |
செயின்ட் எலியெர் (Saint Helier, /sintˈhɛliər/) ஆங்கிலக் கால்வாயின் கால்வாய் தீவுகளில் மிகப் பெரியதான தீவான யேர்சியின் 12 மாவட்டங்களில் (பாரிஷ்) ஒன்றும் தலைநகரமும் ஆகும். செயின்ட் எலியெரின் மக்கள்தொகை ஏறத்தாழ 33,500 ஆகும்; இது யேர்சியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 34.2% ஆகும். இது தலைநகராக இருந்தப்போதும் அரசு மாளிகை செயின்ட் சேவியர் தீவில் உள்ளது. யேர்சியின் பெரிய நகரமாக இருக்கும் எலியெரின் நகரப்பகுதி அடுத்துள்ள செயின்ட் எலியெர் தீவிலும் பரவியுள்ளது. நகரின் புறநகர்ப் பகுதிகள் செயின்ட் லாரன்சு, செயின்ட் கிளெமென்ட் தீவுகளிலும் பரவி உள்ளது. எலியெரின் பெரும்பகுதி ஊரகப் பகுதியாக உள்ளது.
இந்த மாவட்டத்தின் நிலப் பரப்பளவு 4.1 சதுர மைல்கள் (10.6 km2) ஆகும்; இது தீவின் பரப்பளவில் 9% ஆகும். இந்த மாவட்டத்தின் சின்னமாக இரு தங்க கோடாரிகள் குறுக்காக இடப்பட்டுள்ளன; பின்னணி நீலநிறத்தில் உள்ளது. நீல நிறம் கடலையும் தங்கக் கோடரிகள் கிபி 555இல் சாக்சன் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக போராடியதையும் குறிக்கின்றன.