சென்னை மாகாண சுதேச ஆட்சிப்பகுதி முகமை
Madras States Agency | |||||
பிரித்தானிய இந்திய முகமைகள் | |||||
| |||||
சுதேச இராச்சியங்கள் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் 1913 ஆண்டைய வரைபடம். | |||||
வரலாறு | |||||
• | முகமை உருவாக்கம் | 1923 | |||
• | இந்திய ஒன்றியத்துடன் சேர்ப்பு | 1948 |
சென்னை மாகாண சுதேசி ஆட்சிப் பகுதி முகமை அல்லது சென்னை அரசாங்க பேராள ஆட்சி வட்டாரங்கள் (Madras States Agency) என்பது பிரித்தானிய இந்தியாவின் மறைமுக ஆட்சி நடந்த சுதேச அரசுகளின் ஒரு காலனித்துவ அமைப்பாகும். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஐந்து சுதேச அரசுகள் பின்வருமாறு :
- திருவிதாங்கூர், மகாராஜாவுக்கு பாரம்பரியமாக 19 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- கொச்சி, மகாராஜாவுக்கு பாரம்பரியமாக 17 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- புதுக்கோட்டை, ராஜாவுக்கு பாரம்பரியமாக 11 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- பங்கனப்பள்ளி, நவாப்புக்கு பாரம்பரியமாக 9 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- சந்தூர், ராஜாவுக்கு குண்டு வணக்கமில்லா மரியாதை அளிக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]1923 ஆம் ஆண்டுக்கு முன்னர்வரை, சென்னை மாகாணத்துக்கு அருகில் இருந்த இந்த ஐந்து சுதேச அரசுகளும், பொதுவாக இவற்றக்கு அருகில் இருந்த சென்னை மாவட்டத்தின்[1] மாவட்ட ஆட்சிரியரின் பொறுப்பில் இருந்தன.[2] 1923 ஆம் ஆண்டில், அனைத்து சுதேச அரசுகளும் இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன, தனிப்பட்ட அமைப்புகள் அகற்றப்பட்டு இந்திய கவர்னர் ஜெனரலின் பொறுப்பில் ஒற்றை தனி நிறுவனமாக மாற்றப்பட்டது.
திருவாங்கூருக்கான முகவர் அதன் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்தார். அவர் சுதேச அரசுகளின் வெளியுறவு மற்றும் புது தில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்துடன் அவர்களின் உறவை மேற்பார்வை செய்தார்.
இந்தியா 1947 இல் சுதந்திரமடைந்தபோது அந்த முகமை ரத்து செய்யப்பட்டது. 1947 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், திருவாங்கூர் மற்றும் கொச்சி தவிர மற்ற சுதேச அரசுகள் சென்னை மாகாணத்தின் அண்டை மாவட்டங்களுடன் இணைந்தன.
தலைமை அலுவலர்கள்
[தொகு]பேராளர்கள்
[தொகு]# | Name | பொறுப்பு ஏற்பு | பொறுப்பு முடிவு | காலகட்டம் |
---|---|---|---|---|
1 | சி.டபிள்யூ. ஈ. கோட்டன் | 26 சூன் 1923 | 4 மே 1926 | 1 |
2 | எச். ஏ. பி. வெர்னான் (பொறுப்பு) | 4 மே 1926 | 11 நவம்பர் 1926 | 1 |
3 | சி.டபிள்யூ. ஈ. கோட்டன் | 9 நவம்பர் 1926 | 18 ஏப்ரல் 1928 | 2 |
4 | சி. ஜி. குரோசெய்தே | 19 ஏப்ரல் 1928 | 4 திசம்பர் 1929 | 1 |
5 | ஏ. என். எல். கேடர் | 4 திசம்பர் 1929 | 20 அக்டோபர் 1930 | 1 |
6 | எச். ஆர். என். பிரிச்சர்ட் | 20 அக்டோபர் 1930 | 21 நவம்பர் 1932 | 1 |
7 | டொனால்ட் முஹைல் ஃபீல்ட் | 21 நவம்பர் 1932 | 22 பெப்ரவரி 1935 | 1 |
8 | டபிள்யூ. ஏ எம். கார்ஸ்டின் | 22 பெப்ரவரி 1935 | 19 நவம்பர் 1936 | 1 |
9 | கிளரிமோன் பெர்சிவல் ஸ்கிரின் | 19 நவம்பர் 1936 | 1 ஏப்ரல் 1937 | 1 |
ரெசிடென்சி
[தொகு]1937 ஏப்ரல் 1 இல், சென்னை அரசு முகமையானது ரெசிடென்சியாக மாற்றப்பட்டது, மற்றும் 1939 சனவரி 1 அன்று, பங்கனப்பள்ளி மற்றும் சாந்தூரின் சுதேச அரசுகள் மைசூர் ரெசிடென்சிக்கு மாற்றப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India, Oxford, Clarendon Press 1908
- ↑