சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பற்றிய தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

தியாகராஜ பாகவதர் மீதான கொலை வழக்கு[தொகு]

வழக்கு:1944 நவம்பர் 7ல் லட்சுமிகாந்தன் என்ற முன்னால் பத்திரிக்கையாளர் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வேப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக் ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக் ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசைவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவனுடைய ரத்தப்போக்கு காரணத்தால் அடுத்த நாள் காலை மரணமைடந்தான். இதன் காரணமாக பிரித்தானிய போலீஸ் எட்டுப் பேரை கைது செய்து கொலை வழக்குத் தொடர்ந்தது
குற்றம் சாட்டப்பட்டவர்கள்:எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர்.
காலம்:1944ஆம் ஆண்டு நடந்த முதல் 1947 வரை
தீர்ப்பு:
ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. மே 1945ல் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட ஆறு பேர் ‘கொலைச் சதி' குற்றம் செய்தவர் எனத் தீர்மானிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஸ்ரீராமுலு கொலைச் சம்பவம் நடந்தபோது அவர் உள்ளூரில் இல்லை என்ற காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார். 1946ல் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர்.

ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறுபரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல் விடுதலை செய்தது. 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை நீதிபதிகள் ஹாப்பலும், ஷஹாபுத்தீனும் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். “இந்த வழக்கில் அப்ரூவரான ஜெயானந்தனின் வாக்குமூலம் ஊர்ஜிதம் ஆகவில்லை. ஊர்ஜிதம் செய்யப்படாத அந்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரையும் விடுதலை செய்கிறோம்” என்று தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தார்கள்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு[தொகு]

பின்புலம்: 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர்க் கல்வி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்ட்டல் பாடத்திட்டங்கள் ஆகிய 4 பாடத்திட்டங்களுக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வரப்படும் என்று அறிவித்தது.

2011 ல் பதவியேற்ற அதிமுக தலைமையிலான அரசு பதவியேற்றபின் முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வழ‌க்க‌றிஞ‌ர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடினா‌ர். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

தீர்ப்பு:
சமச்சீர்க் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர்க் கல்வியை 2011 ஆம் ஆண்டில் இருந்தே அமல்படுத்துமாறு 18 ஜூலை 2011 அன்று உத்தரவிட்டது.[1]

உசாத்துனைகள்[தொகு]

அன்று தமிழகமே கொந்தளித்து வென்ற வழக்கு[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சமச்சீர்க் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு