செஞ்சிலுவை செம்பிறைச் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சின்னங்கள் ஜெனிவாவில். அண்மையில் செம்படிகம் சின்னம் இவற்றுடன் இணைந்தது.

செஞ்சிலுவை செம்பிறைச் சின்னங்கள் (Emblems of the International Red Cross and Red Crescent Movement) என்னும் சின்னங்கள் ஜெனிவா உடன்படிக்கையின்படி போர்க் காலங்களில் மனிதாபிமான உதவிசெய்வும் மருத்துவ உதவி செய்பவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் அணியும் சின்னங்களாகும். வெண்மைநிறப் பிண்ணணியில் செஞ்சிலுவை, செம்பிறை, செஞ்சிங்கம் மற்றும் கதிரவன், செம்படிகம் ஆகிய சின்னங்கள் இடம்பெறும் இச்சின்னங்கள் செஞ்சிலுவை வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக அதன் சின்னமாக இருந்தவையாகும். ஆனால் ஒரு சில சின்னங்கள் நீண்ட காலம் இல்லாதவையாகும்.

செஞ்சிலுவைச் சின்னம்

சின்னங்களின் பயன்[தொகு]

இச்சின்னங்கள் பாதுகாப்புப் பயனையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. போர் காலங்களில் மிகச் சிறந்த பாதுகாப்புச் சின்னமாக இதை ஜெனிவா ஒப்பந்தம் வகைசெய்துள்ளது. போர் காலங்களில் எல்லாத் தரப்பினரும் சேவை புரிவோரை எளிதாக அடையாளங்காண ஏதுவாக இச்சின்னங்கள் விளங்குகின்றன.

செம்பிறைச் சின்னம்

செஞ்சிலுவை சின்னம்[தொகு]

1864ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜெனிவா ஒப்பந்தம் வெள்ளை நிற அடிப்பரப்பில் சிவப்பு நிற சிலுவை அமைந்த அடையாளக் குறியீட்டை போர்ப்படையில் மருத்துவப் பிரிவில் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

செம்பிறைச் சின்னம்[தொகு]

பால்கன் தீபகற்பத்தில் 1876இல் இருந்து 1878 வரை நடந்த உருசிய துருக்கிப் போரின் போது செஞ்சிலுவைச் சின்னத்தை அணிவதற்கு பதிலாக செம்பிறைச் சின்னத்தை பயன்படுத்துவது என ஓட்டோமான் பேரரசு முடிவெடுத்தது. எகிப்தும் இச்சின்னத்தை பயன்படுத்த முடிவெடுத்தது. இதன் பிறகு இச்சின்னம் 1929இல் அங்கீகரிக்கப்பட்டது. ஏனைய முஸ்லிம் நாடுகளும் இச்சின்னத்தைப் பயன்படுத்திவருகின்றன.

செஞ்சிங்கம் மற்றும் கதிரவன் சின்னம்

செஞ்சிங்கம் மற்றும் கதிரவன் சின்னம்[தொகு]

ஈரான் 1924 இல் 1980வரை வெள்ளை அடிபரப்பில் சிவப்பு நிறத்தில் சிங்கம் மற்றும் கதிரவன் அமைந்த சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. 1929இல் இச்சின்னம் அங்கீகரிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் ஈரான் இஸலாமியக் குடியரசானது அதன்பிறகு அந்நாடு செஞ்சிங்கம் மற்றும் கதிரவன் சின்னத்தினைக் கைவிட்டது.

செம்படிகச் சின்னம்

செம்படிகம் சின்னம்[தொகு]

செம்படிகம் என்னும் இச்சின்னத்தை இஸ்ரேலின் தேசிய சொசைட்டியும் வேறு சிலரும் பொதுவன ஒரு சின்னமாக இருக்க இதைப் பரிந்துரைத்தனர். பல்லாண்டுகலாக இச்சின்னத்தைப்பற்றிய விவாதம் இருந்துவந்தது. பின் 2005இல் இச்சின்னம் மூன்றாவது சின்னமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கோள்ளப்பட்டது.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]