செங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்குயில்
BandedBayCuckoo.jpg
C. s. sonneratii from kerala, India
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: குக்குலுசிபார்மிசு
குடும்பம்: குக்குலிடே
பேரினம்: காகோமாண்டிசு
இனம்: கா. சோனேராதி
இருசொற் பெயரீடு
காகோமாண்டிசு சோனேராதி
(இலாதம், 1790)
Banded Bay Cuckoo ebird data map.png
Global range     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

பெந்தொசெராக்சி சோனேராதி

செங்குயில் (Banded bay cuckoo) இந்திய துணைகண்டத்திலும் தென் ஆசியாவிலும் காணப்படும் ஒரு சிறிய வகை குயிலினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களைப் போலவே, இவை ஒரு வட்ட நாசியைக் கொண்டுள்ளன. இவை பொதுவாக மலைகளின் கீழ்ப்பகுதிகளில் நன்கு மரங்கள் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன. இனப்பெருக்க காலத்தில் நன்கு தெரியும் மரக்கிளைகளிலிருந்து ஆண் பறவைகள் பாடும். இப்பண்பு பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் ஓசைகள் மற்றும் இறகுகள் ஆண் பெண் பறவைகளில் தனித்தன்மையுடன் மாறுபடும். இதே போல் வெள்ளை புருவம் கொண்ட தோற்றம் மற்றும் வழக்கமான அடர் பட்டைகள் கொண்ட பழுப்பு மேல் பகுதி மற்றும் மெல்லிய கோடுகளுடன் வெண்மையான அடிப்பகுதிகளால் வேறுபடுகின்றன.

பெயர்கள்[தொகு]

தமிழில்  :செங்குயில்

ஆங்கிலப்பெயர்  :Banded Bay Cuckoo

அறிவியல் பெயர் :Cacomantis sonnerattii [2]

உடலமைப்பு[தொகு]

இதன் உடல் நீளம் 24 செ.மீ. வரையிலும், செம்பழுப்பான உடலில் பழுப்புநிறக் குறுக்குக் கோடுகளுடன் காணப்படும். இப்பறவையின் உடலில், அடிப்பாகம் வெண்மையான பழுப்புக் குறுக்குக் கோடுளுடன் இருக்கும். வெளிர் செம்பழுப்பான வாலில் வெள்ளையும் கருப்புமான திட்டுக்கள் இதனை அடையாளங்காண உதவும் பண்பாகும்.

செங்குயிலின் தலை அமைப்பு

காணப்படும் பகுதிகள்[தொகு]

அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகள், தோப்புகள், இலையுதிர்க்காடுகள், விளைநிலங்களை அடுத்த தோட்டங்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே காணலாம். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலேயே சிறப்பாகக் காணப்படும்.

உணவு[தொகு]

இது உயரமரக் கிளைகளில் கம்பளிப்பூச்சசி, வண்டு ஆகியனவற்றை இரையாகத் தேடித்திரிவது. குளிர்காலத்தில் மௌனம் சாதிப்பதால் இதன் இருப்பைக் கண்டுகொள்வது கடினம். கோடையில் வீஃடி. டீ…டி எனத் தொடங்கும் குரல் கொடுப்பதைக் காலை மாலைகளில் கேட்கலாம். மேக மூட்டமான நாட்களில் பகல்முழுவதும் குரல் கொடுத்தபடி இருக்கும். [3]

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய கொண்டைக் கருவி மஞ்சள் சிட்டு, சிலம்பன் முதலிய பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தில் அவற்றின் கூடுகளில் முட்டையிட்டுச் செல்லும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cacomantis sonneratii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Banded_bay_cuckoo செங்குயில்". 11 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:71

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cacomantis sonneratii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குயில்&oldid=3625682" இருந்து மீள்விக்கப்பட்டது