செக்ரா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்ரா கான்
Zehra Khan
வீடு சார்ந்த பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்
கல்விபாலினப் படிப்பில் முதுநிலை மற்றும் ஆடை மற்றும் நெசவுத் துறையில் இளநிலை

செக்ரா கான் (Zehra Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதியும் ஆர்வலருமாவார். [1] [2] வீட்டு அடிப்படையிலான பெண் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். [3] [4] சிந்து குறைந்தபட்ச ஊதிய வாரியம், சிந்து முத்தரப்பு தொழிலாளர் நிலைக்குழு, சிந்து தொழில் மற்றும் சுகாதார மன்றம் , சிந்து வீட்டு அடிப்படை பெண் தொழிலாளர்கள் ஆளும் குழு உள்ளிட்ட பல முத்தரப்பு குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.

தொழில்[தொகு]

கான் மகளிர் ஆய்வுத் துறையின் மாணவியாக இருந்தபோது, வீட்டு அடிப்படையிலான பணியாளர்களின் பங்களிப்புகளைப் பற்றி அறிந்து கொண்டார், தனது முதுகலை ஆய்வறிக்கைக்கான பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். [5] [6] ஆய்வில், இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கக்கூடிய சட்ட உரிமைகளின் அவசியத்தை உணர்ந்தார். [7] [8] பல்வேறு தொழில்களில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு கூட்டமைப்புகளை உருவாக்கும் எண்ணம் கானிடம் தோன்றியது. [9] [10] வீட்டு அடிப்படை பெண் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்ள பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இவர் தனது வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தைத் தொடங்கினார். [11] [12] கூட்டங்கள் வழக்கமான கலந்துரையாடல் வட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இறுதியில் பெண்களை அமைப்பின் பேரணிகளில் ஈடுபாட்டுடன் சேரச் செய்தது. [13] [14]

தொழிற்சங்கங்களின் உருவாக்கம் வளையல் தொழிலில் தொடங்கி படிப்படியாக ஆடைத் தொழிலை நோக்கி நகர்ந்தது. [15] [16] பின்னர் வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்களுக்காக ஒரு சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இவர் பணியாற்றத் தொடங்கினார், அதனால் கான் அவர்களுக்கான உறுப்பினர் வட்டங்களை உருவாக்கத் தொடங்கினார். [17] [18] கானின் பணி இறுதியில் சிந்து மற்றும் பலுசிசுதானில் தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது, இந்நிகழ்வு தெற்காசியாவில் முதல் முறையாகும். [19] [20] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வீட்டு அடிப்படையிலான பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

கான் குடிமக்கள் சமூக குழுக்கள் மற்றும் சங்கங்களின் ஒரு பகுதியாகவும் உள்ளார். [21] [22] பெண் உரிமைகள், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சிறுபான்மை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வரும் ஓர் ஆர்வலராக செயல்படுகிறார். [23] [24] [25] பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கான் பணியாற்றியுள்ளார். [26] [27] [28]

மேற்கோள்கள்[தொகு]

  1. "School of Resistance - Episode Three: Distributing Dignity". HowlRound Theatre Commons (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  2. "Women, civil society groups announce separate rally on March 8". Pakistan News (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  3. "HBWWF calls for implementing Sindh Home-Based Workers Act". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  4. "Perspectives: Home-based policy still distant dream for millions of workers in Pakistan". Law at the Margins (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  5. Equity, Roots for. "NEW SINDH POLICY ON HOME-BASED WORKERS LAUDED | Roots for Equity" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  6. "HBWWF demands practical implementation of SHBWA". Labour News International (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  7. "Minimum wages demanded for home-based workers". National Courier (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. emydemkess. "HBWWF". behindmycloset (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  9. Hasan, Shazia (2020-11-12). "Sindh labour department signs MoU for home-based workers' registration". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  10. Glover, Simon. "Pakistani workers protest over jobs and pay". Ecotextile News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  11. "Nieuws - Pagina 221 van 1653". OneWorld (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  12. HumanityHouse. "Feminist Zehra Khan's battle against the clothing industry". Humanity House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  13. "We Have To Include Women To See A Change In Society - Zehra Khan Interview | Homenet South Asia". hnsa.org.in. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  14. Shop, The Little Fair Trade. "Interviews - Home Based Women's Workers Federation (HBWWF), Karachi, Pakistan, (2011 & 2015) FAIR TRADE PAKISTAN SERIES". The Little Fair Trade Shop (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  15. ":: Labour Education Foundation ::". www.lef.org.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  16. "HBWWF, Sindh Labour, Human Resource Depts Sign MoU To Start Registration". UrduPoint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  17. "HBWWF Demands Announcement Of Policy For Home Based Workers". Pakistan Point. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  18. "12m home-based workers go without legal identity in Pakistan". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  19. "Labourers stage protest over pending wages in Karachi". Daily Balochistan Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  20. "Pakistan: Massenentlassungen während der Covid-19-Pandemie". SOLIFONDS (in ஸ்விஸ் ஹை ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  21. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
  22. Supran, A. (2019-11-11). "Activists demand arrest of Pak Hindu student's killers". Samaj Weekly (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  23. pakobserver. "workplace harassment".
  24. "Activists demand arrest of Pak Hindu student's killers – British Asia News" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  25. admin (2020-03-06). "Civil society activists slam `hatred-based propaganda` against women – 6 March 2020". AGHS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  26. "Activists demand arrest of Pak student's killers". The Siasat Daily (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  27. "Activists Demand Arrest Of Pak Hindu Student's Killers |". Ommcom News (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  28. "Activists demand arrest of Pak Hindu student's killers". News24 English. 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ரா_கான்&oldid=3710037" இலிருந்து மீள்விக்கப்பட்டது