சூ சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூ சி
பிறப்புஅக்டோபர் 18, 1130
இறப்புஏப்ரல் 23, 1200
காலம்சோங் வம்சம்
பகுதிசீன மெய்யியலாளர்
பள்ளிகான்பூசியசியம், புதுக்கான்பூசியசியம்

சூ சி என்பவர் சோங் வம்சக் காலத்தைச் சேர்ந்த கான்பூசிய அறிஞர் ஆவார்.இவர் கொள்கைச் சிந்தனைக் குழுவின் முக்கியமானவரும், சீனாவின் பகுத்தறிவுவாதப் புதுக்கான்பூசியத்தில் செல்வாக்கு மிகுந்தவரும் ஆவார். இவர் எழுதிய நான்கு நூல்களும், விடயங்களை ஆராய்ந்தறியும் முறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும், கான்பூசிய அடிப்படைக் கருத்துருக்களைத் தொகுத்ததும் இவர் சீன மெய்யியலுக்கு அளித்த பெரும் பங்களிப்பு ஆகும்.

வாழ்க்கை[தொகு]

சூ சியின் குடும்பத்தினர் ஊய் பிரிவைச் சேர்ந்த வூ யுவான் கவுன்டியைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தையார் அரசில் உயர் பதவி வகித்து வந்தார். அவர் தொழில் பார்த்துவந்த பூசியான் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். அரசின் கொள்கை தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இவரது தந்தையார் 1140 ஆம் ஆண்டில் பணியிலிருந்து நீங்கினார். சூ சி வீட்டில் இவரது தந்தையிடமே கல்வி பயின்றார். 1143 ஆம் ஆண்டில் இவரது தந்தையார் இறக்கவே சூ சி, அவரது தந்தையின் நண்பர்களான ஊ சியான், லியு சீகுய், லியூ மியான்சி என்பவர்களிடம் கல்வி பயின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ_சி&oldid=2713271" இருந்து மீள்விக்கப்பட்டது