உள்ளடக்கத்துக்குச் செல்

சூரிய மையவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹார்மோனியா மேக்ரோகாஸ்மிக்காவில் இருந்து ஆண்ட்ரியாசு செல்லரியசின் கோப்பர்நிக அமைப்பின் விளக்கம்

சூரியமைய வாதம் [a] ( சூரிய மையப் படிமம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது வானியல் படிமமாகும், இதில் புவியும் கோள்களும் புடவி மையச் சூரிய மையத்தில் சுற்றி வருகின்றன. வரலாற்று வழியில், சூரிய மையம் புவி மையத்திற்கு எதிரானது, பின்னது புவியை மையத்தில் வைத்தது. புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்து கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே சாமோசின் அரிசுட்டார்க்கசால் முன்மொழியப்பட்டது, [1] அவர் குரோட்டனின் பிலோலாசு (கி.மு. 470 - 385) முன்வைத்த கருத்தாக்கத்தால் தாக்கமுற்றார். கிமு 5 ஆம் நூற்றாண்டில், கிரேக்க தத்துவஞானிகளான பிலோலாசும் கிசெடாசும் புவிக் கோளம் என்றும், ஒரு "மாய" மைய நெருப்பைச் சுற்றி வருவதாகவும், இந்த நெருப்பு புடவியை ஒழுங்குபடுத்துகிறது என்றும் வெவ்வேறு சூழல்களில் எண்ணினர். இருப்பினும், இடைக்கால ஐரோப்பாவில், அரிசுட்டார்க்கசின் சூரிய மையவாதம் பெரிதும் கவனிக்கப் படவில்லி. ஒருவேளை இது எலனியக் காலத்தின் அறிவியல் படைப்புகளின் இழப்பு காரணமாக இருக்கலாம். [b]

பதினாறாம் நூற்றாண்டு வரை சூரிய மைய அமைப்பின் கணிதப் படிமம் மறுமலர்ச்சிக் கால கணிதவியலாளர், வானியலாளர், கத்தோலிக்க மதகுரு நிக்கோலசு கோபர்னிக்கசு ஆகியோரால் முன்வைக்கப்பட்டது, இது கோபர்னிகப் புரட்சிக்கு வழிவகுத்தது. அடுத்த நூற்றாண்டில், யோகான்னசு கெப்ளர் நீள்வட்ட சுற்றுப்பாதைகளை அறிமுகப்படுத்தினார், மேலும் கலிலியோ கலிலி தொலைநோக்கியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நோக்கீடுகளை வழங்கினார்.

வில்லியம் எர்சல், பிரெடரிக் பெசல், பிற வானியலாளர்களின் நோக்கிடுகளின் மூலம், சூரிய குடும்பத்தின் ஈர்ப்புமையத்துக்கு அருகில் சூரியன் இருக்கும் போது,அது பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை என்று உணரப்பட்டது.

தமிழரின் கோட்பாடு[தொகு]

சிறுபாணாற்றுப்படையில் வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சூரியனை கோள்கள் சுற்றுவதை பதிந்துள்ளார்.[3][4] திருவள்ளுவர் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என திருக்குறளில் உலகம் சுழலும் பொருள் என்பதை குறிப்பிட்டுள்ளார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Optionally capitalised, Heliocentrism or heliocentrism, according to The Shorter Oxford English Dictionary (6th ed., 2007). The term is a learned formation based on Greek ἥλιος Helios "Sun" and κέντρον kentron "center"; the adjective heliocentric is first recorded in English (as heliocentrick) in 1685, after Neo-Latin heliocentricus, in use from about the same time (Johann Jakob Zimmermann, Prodromus biceps cono ellipticæ et a priori demonstratæ planetarum theorices, 1679, p. 28). The abstract noun in -ism is more recent, recorded from the late 19th century (e.g. in Constance Naden, Induction and Deduction: A Historical and Critical Sketch of Successive Philosophical Conceptions Respecting the Relations Between Inductive and Deductive Thought and Other Essays (1890), p. 76: "Copernicus started from the observed motions of the planets, on which astronomers were agreed, and worked them out on the new hypothesis of Heliocentrism"), modelled after German Heliocentrismus or Heliozentrismus (c. 1870).
  2. According to Lucio Russo, the heliocentric view was expounded in Hipparchus' work on gravity.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dreyer 1953; Linton 2004. The work of Aristarchus in which he proposed his heliocentric system has not survived. We only know of it now from a brief passage in Archimedes' The Sand Reckoner.
  2. Russo, Lucio (2003). The Forgotten Revolution: How Science Was Born in 300 BC and Why it Had to Be Reborn. Translated by Levy, Silvio. Springer Berlin Heidelberg. pp. 293–296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-20068-0.
  3. JV Chelliah (1946). Pattupattu - Ten Tamil Idylls (Tamil Verses with Englilsh Translation). Tamil University (1985 print).
  4. Herbert, Vaidehi (December 2, 2010). "Sirupaanatrupadai". Learn Sangam Tamil.
  5. Rev.Dr.G.U., Pope (17 திசம்பர் 2023). "திருக்குறள்". Tamil Virtual University.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heliocentric model
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_மையவாதம்&oldid=3846930" இலிருந்து மீள்விக்கப்பட்டது