சூடான வியாழனை போன்ற கோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு சூடான வியாழனை போன்ற கோளின் கற்பனை வடிவம்.

சூடான வியாழனை போன்ற கோள்கள்(Hot Jupiter) என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை(கோள்) போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை (கோள்) விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது[1], அதாவது தோரயமாக 0.015 மற்றும் 0.5 வானியல் அலகு (2.2×106 மற்றும் 74.8×106 கி.மீ) துராத்தில்[2]. நமது வியாழன் (கோள்) அதன் விண்மீனான சூரியனை தோரயமாக 5.2 வானியல் அலகு (780×106 கி.மீ) துராத்தில் சுற்றி வருவதால் இதன் வெப்பநிலைக் குறைவாகவே உள்ளது.

நம்மால் நன்கறியப்பட்ட சூடான வியாழன் போன்ற கோள் 51 பெகாசி பி.இதன் செல்லப்பெயர் பெல்லெரோபன்.இது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது.சூரியனை போன்ற விண்மீன்களை சுற்றி வரும் புறக்கோள்களில் இந்த கோள் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]