சுவாலை உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாலை உயிரணு (Flame cell) என்பது தட்டையான புழுக்கள், ரோட்டிபர்கள் மற்றும் நெமர்டீன்கள் உள்ளிட்ட நன்னீர் முதுகெலும்பிலிகளில் காணப்படும் சிறப்பு கழிவுநீக்க செல்லாகும். சுடர் செல் சிறுநீரகத்தைப் போலச் செயல்பட்டு கழிவுப்பொருட்களை அகற்றுகின்றது. சுடர் செல்கள் பல சேர்ந்து கொத்தாகக் காணப்படும் போது, புரோட்டோநெப்ரிடியா எனப்படுகிறது.[1]

சுடர் செல்லானது உட்கருவுடைய உடலுடன் "கிண்ண வடிவ" பிதுக்கத்துடன் உட்புறத்தில் கசை இழையினைக் கொண்டது. கசை இழையின் அசைவு சுடரை ஒத்திருக்கிறது; எனவே இச்செல்லுக்கு இப்பெயர் வந்தது. கிண்ணமானது குழாய் கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பரப்பு முழுவதும் குற்றிலை காணப்படுகிறது. குற்றிலை அசைவினால் கலத்தின் வழியாகத் திரவ நகர்வு செயல் நடைபெறுகிறது. இக்குழாய் வெளிப்புறமாக நெப்ரோபோர் எனப்படும் துளை மூலமோ அல்லது டிரிமெட்டோடாவில் கழிவகற்று சிறுநீர்ப்பையில் திறக்கின்றது. சுடர் செல்லின் பணியாக சவ்வூடுபரவற்குரிய அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதும், அயனிச் சமநிலையைப் பராமரிப்பதும் ஆகும். சில அயனிகளை மீண்டும் உறிஞ்சுவதற்குக் குழாய் கலத்தில் உள்ள மைக்ரோவில்லி உள்ளது.[1]

சுடர் செல் மற்றும் குழாய் கலத்திற்கு இடையிலான இடைவெளி வழியாக மூலக்கூறுகள் குழாய் கலனில் கழிவு நீக்கத்திற்காக நுழைகின்றன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலை_உயிரணு&oldid=3780617" இலிருந்து மீள்விக்கப்பட்டது