சுவாலி கடற்கரை

ஆள்கூறுகள்: 21°09′43.4″N 72°38′28″E / 21.162056°N 72.64111°E / 21.162056; 72.64111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாலி கடற்கரை
Suvali Beach
சுவாலி கடற்கரை
சுவாலி கடற்கரை, சூரத்து
வகைபகுதி நகரம், மணல் கடற்கரை
அமைவிடம்கொங்கண் மண்டலம், அரபிக்கடல், சுவாலி கிராமம், சூரத்து, குசராத்து
Nearest cityசூரத்து, இந்தியா
ஆள்கூறு21°09′43.4″N 72°38′28″E / 21.162056°N 72.64111°E / 21.162056; 72.64111
Operated byசூரத்து மாநகராட்சி ஆணையம்

சுவாலி கடற்கரை (Suvali Beach) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அமைந்துள்ளது.[1][2] முன்னதாக சுருக்கமாக சுவாலி அல்லது சுவாலி சாலை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சூரத்து நகரத்தின் அசிரா புறநகர் பகுதியில் அரபிக் கடலை ஒட்டி இது அமைந்துள்ளது. கருப்பு மணல் நிறைந்த கடற்கரையாக இக்கடற்கரை சிறப்பு பெறுகிறது. சூரத் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம் ஆகியவை சுவாலி கடற்கரைக்கு அருகாமையில் முறையே 25 கி.மீ மற்றும் 30 கி.மீ தொலைவில் உள்ளன.

சுவாலி கடற்கரையின் வரலாறு[தொகு]

சுவாலி கடற்கரை நவீன இந்திய கடற்படையின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.[3] பிரித்தானியாவின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்த இடமாக இருந்தது.[4] 1612 - ஆம் ஆண்டில் தளபதி தாமசு பெசுட்டு இங்குதான் சுவாலி போரில் போர்த்துகீசியர்களை சந்தித்து தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suvali Beach, Surat, Tourism Hubs, Gujarat, India". www.gujarattourism.com. Archived from the original on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  2. A Relation of Some Yeares Travaile, Begunne Anno 1626. Into Afrique and the Greater Asia., by Thomas Herbert
  3. Khurana, Ashleshaa (21 November 2015). "Suvali: The birthplace of Indian Navy". Times of India. https://timesofindia.indiatimes.com/city/surat/Suvali-The-birthplace-of-Indian-Navy/articleshow/49868210.cms. பார்த்த நாள்: 3 August 2018. 
  4. Sharma, Sachin (8 April 2003). "Hunt on to locate port of British entry". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Hunt-on-to-locate-port-of-British-entry/articleshow/42701870.cms. பார்த்த நாள்: 3 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலி_கடற்கரை&oldid=3620245" இலிருந்து மீள்விக்கப்பட்டது