சுவார்ன் நூரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவார்ன் நூரா
இசை வடிவங்கள்சூபி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பாடகர்

சுவார்ன் நூரா (Swarn Noora) இந்தியாவின் பஞ்சாபின் அமிருதசரசைச் சேர்ந்த சூபி பாடகர் ஆவார். இவர் இந்தியாவின் முக்கிய விழாக்களில் நிகழ்த்தியுள்ளார்.[1] இவர் ஜலந்தரில் உள்ள பூட்டன் மண்டியில் வசிப்பவராகவும் ஆனார். இவர் பஞ்சாப்பின் புகழ்பெற்ற சூபி பாடகர்களான நூரான் சகோதரிகளின் பாட்டி ஆவார்.[2]

இளமை[தொகு]

புகழ்பெற்ற சூபி பாடகியான பீபி நூராவுக்கு சுவார்ன் நூரா மகளாகப் பிறந்தார். இவரது குடும்பம் இன்றைய பாக்கித்தானில் உள்ள ல்யால்பூரை (இப்போது பைசலாபாத்) சேர்ந்தவர்கள்.

பணி[தொகு]

சுவார்ன் நூராவின் குடும்பம் இன்றைய பாக்கித்தானில் உள்ள லையால்பூரைச் சேர்ந்தது. ஆனால் இவரது குடும்பம் இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து. சுவார்ன் நூரா அமிர்தசரசுக்கு அருகில் பிறந்தார். இவர் தனது மறைந்த கணவர் சோகன் லாலை தனது உண்மையான உஸ்தாத் (ஆசிரியர்) என்று கருதினார். இவர் தேசிய அளவில் பாராட்டப்பட்ட சூபியானா கலத்தின் பாடகியாவார். ஒரு சிறு பெண்ணாக இருந்தபோதும் இவர் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது தாயார் பாடுவது தனது மகளுக்குப் பொருத்தமான தொழிலாக இருக்கும் எனக் கருதவில்லை. மேலும் தொழில் ரீதியாகப் பயிற்சி செய்ய இவரை ஊக்குவிக்கவில்லை. இவர் தனது இருபத்தி ஒன்று வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவரும் பாடகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்கள் வழக்கமாகப் பெரும்பாலும் கவ்வாலி எனும் தொழில்முறை நிகழ்ச்சிகளைச் செய்தனர். இவர் விவரிக்க முடியாத நோயால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும், அப்போதுதான் இவரது கணவர், அனைத்து வகையான மருந்துகளையும் முயன்று தோல்வியடைந்ததாக வருத்தப்படுகிறார். பின்னர் இவர் தொழில் ரீதியாகப் பாடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார். நூராவின் விருப்பத்தினை உடனடியாக ஒப்புக் கொண்டு, பார்வையாளர்களுக்கு முன்னால் பாடுவதற்கு அவரை சித்தப்படுத்த, தோலக் மற்றும் தப்லாவுடன் பாட அவருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதுவே தொழில்முறை பாடலுக்கு இவரது பயணத்தின் தொடக்கமாக இருந்தது. இவரது கணவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். பின்னர் நூரா தனது மகன் தில்பகாருடன் பாட ஆரம்பித்தார். தில்பகார் பாடவும் ஆர்மோனியம் இசைக்கவும் செய்தார்.[3] மூத்த மகன் குல்சன் ஒரு இசையமைப்பாளர். இவர் நூரா பாடிய பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இரண்டாவது மகன் குல்சார் ஒரு தோலக் இசைக்கலைஞர் ஆவார்.

நூராவின் முதல் இசைத்தொகுப்பு beatofindia.com என்ற நாட்டுப்புற இசை விளம்பரக் குழுவால் வெளியிடப்பட்டது. இந்த இசைத்தொகுப்பின் மூலம் இவரது குரலினைக் கேட்ட உலகெங்கிலும் உள்ள பல தயாரிப்பாளர்கள் தங்கள் பாடல்களில் நூரானின் பாடலைப் பயன்படுத்த வழிவகுத்தன.

நூரா தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் ஜலந்தர் நகரில் வசித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to ambedkartimes.com".
  2. "Local area network". 16 October 2005.
  3. beatofindia.com [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவார்ன்_நூரா&oldid=3909787" இலிருந்து மீள்விக்கப்பட்டது