சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு
நூலாசிரியர்சுவாமி ஆசுதோஷானந்தர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைவாழ்க்கை வரலாறு
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை, 2012
பக்கங்கள்516
ISBN978-81-7823-681-0

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு[1]ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதர சீடருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ஆகும். இந்நூல் இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவராகத் திகழ்ந்த (1971-1991) தபஸ்யானந்தர் சுவாமிகள் எழுதிய "Swami Ramakrishnanada: An Apostle of Sri Ramakrishna to the South" என்னும் நூலின் அடிப்படையில் அமைந்த நூலாகும்.

நூலின் சிறப்பு[தொகு]

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பிறப்பு, இளமைப் பருவம், பக்தி, அவரது பூஜை ஆர்வம் எவ்வாறு அவரது குருதேவர் ராமகிருஷ்ணரின் வழிபாடாக அமைந்தது, ராமகிருஷ்ண மடத்தின் தாய் என்றும் தூண் என்றும் சுவாமி விவேகானந்தராலேயே பாராட்டப்பட்ட அவரது எளிய வாழ்க்கைமுறை, மடத்தின் ஆரம்ப காலகட்டத்தில் வராகநகர் மடத்தின் சிரமமான காலகட்டத்தில் சகோதர சீடர்களின் உடல்நலனை தாய் போன்ற பரிவுடன் அவர் கவனித்துக் கொண்டவிதம் என்று பல சம்பவங்களை விவரித்துள்ளார் ஆசிரியர்.

1897 ஆண்டு ஏப்ரல் பிரபுத்த பாரதா இதழில் ’ராமகிருஷ்ணானந்தர், சதானந்தர் ஆகிய இரண்டு துறவிகள் சுவாமி விவேகானந்தருடைய திட்டங்களைச் செயலாக்கும் பொருட்டு சென்னைக்கு வந்துள்ளனர். விரைவில் அவர்கள் கீதை மற்றும் வேதாந்த வகுப்புகள் தொடங்க இருக்கின்றனர்.’ என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பணி சென்னையில் துவங்கியது, விவேகானந்தரால் பணிக்கப்பட்டு ராமகிருஷ்ண இயக்கத்தின் பணிக்காக சென்னை வந்தது, சென்னையில் தமது குருதேவர் வழிபாட்டுடன் முதல் கிளை மடம் ஆரம்பித்தது, சென்னையில் ஆரம்ப நாட்களில் அவரது பணிகளுக்கு ஏற்பட்ட தடைகள், போக்குவரத்து வசதி அந்த அளவு இல்லாத அந்த காலத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்ற அவர் பட்ட சிரமங்கள், நிவாரண பணிகளுக்கான நிதி திரட்டியது, அவரது பணிகளுக்கு ஆதரவு காட்டியவர்கள் பற்றிய பல குறிப்புகள் என பலதரப்பட்ட பகுதிகள் மூலம் அந்த காலகட்ட சென்னை பற்றிய பல குறிப்புகளையும் கொண்டுள்ளது இந்த நூல்.

பலரது நினைவுக்குறிப்புகள், தமிழ் உலகில் இவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வ.உ.சிதம்பரனார் உள்பட பலரைப் பற்றிய குறிப்புகள், இவரது சிந்தனைத் துளிகள், விவேகானந்தர் மீது இவர் இயற்றிய ’விவேகானந்த பஞ்சகம்’ இவர் மீது ஸ்ரீ வீ.ஆர். கல்யாண சுந்தர் சாஸ்த்ரிகள் இயற்றிய ராமகிருஷ்ணானந்த மகிமை என்ற பாடல் முதலிய தகவல்களும் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-06-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)