சுவராஜ் பிரகாஷ் குப்தா
சுவராஜ் பிரகாஷ் குப்தா (Swaraj Prakash Gupta, 1931–2007) இந்தியாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்.[1] இவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவர் கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் என அறியப்பட்டார். இந்திய வரலாறு தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும் தனக்கு விருப்பமானத் துறைகள் தொடர்பாக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஹராப்பா நாகரிகப் பகுதியில் பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். இவர் இந்திய தொல்லியல் ஆய்வுகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர் உலகின் பல நாடுகளில் 30 க்கும் அதிகமான கருத்தரங்குகளில் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் பணி ஓய்வு பெறும்போது அலகாபாத் காட்சியகத்தின் இயக்குனராகப் பணியாற்றினார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ obit பரணிடப்பட்டது 2011-01-03 at the வந்தவழி இயந்திரம் retrieved 3rd June 2010