சுலேகா சன்யால்
சுலேகா சன்யால் | |
---|---|
பிறப்பு | கோரோக்டி, ஃபரிதாபூர், கிழக்கு வங்காளம், பிரித்தானிய இந்தியா, தற்போதைய வங்காளதேசம் | 15 சூன் 1928
இறப்பு | 1962 (அகவை 33–34) |
தொழில் | வங்காள மொழி எழுத்தாளர், புரட்சியாளர் |
மொழி | வங்காள மொழி |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாபன்கூர் (நாற்று) , 'சிந்துரே மேக்' (சிவப்பு நிறத்தில் மேகங்கள்) |
சுலேகா சன்யால் (15 ஜூன் 1928– 1962) ஒருங்கிணைந்த இந்தியாவின் வங்காள மொழி எழுத்தாளரும், பொதுவுடமை புரட்சியாளருமாவார்.
1956 ஆம் ஆண்டில் வெளியான நபங்கூர் ( தி நாற்று ) என்ற படைப்பின் மூலம் வங்காளத்தில் பெண்ணியவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். இவரது இந்த படைப்பு 2001 ஆம் ஆண்டில் கௌரங்கா பி. சட்டோபாத்யாயின் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சுலேகா, தற்போதைய பங்களாதேஷில் உள்ள ஃபரித்பூரில் உள்ள கொரோக்டியில், ஒரு காலத்தில் கருநீலத் தோட்ட உரிமையாளர்களாக இருந்து பிற்பாடு ஏழ்மை நிலைக்கு வந்த ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் பிரம்ம தத்துவவாதியும் சீர்திருத்தவாதியுமான , ராம்தானு லஹிரியின் மீது மிகுந்த பற்றுடையவராக இருந்துள்ளார். இந்த தத்துவவாதி இவரது தாயின் வழியில் உறவுமுறை கொண்டவராவார்.
1944 ஆம் ஆண்டில் தனது பள்ளிப்படிப்பை தனித்தேர்வராக இருந்து தேர்ச்சி பெற்ற சுலேகா, 1946 அம் ஆண்டில் ஃபரித்பூரில் உள்ள ராஜேந்திரா கல்லூரியில் இடைநிலைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, கொல்கத்தா சென்று விக்டோரியா கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துள்ளார், [1]
எழுத்தாளராக
[தொகு]நபான்கூர் என்ற இவரது புதினம் ஆங்கிலத்தில் 2001 ஆம் ஆண்டில் ஸ்ட்ரீ வெளியீட்டாரால் வெளியிடப்பட்டுள்ளது அதன் கதாநாயகி, சோபி, 1930 களில் வங்காளத்தில் உள்ள ஒரு கிராமப்புற ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், மேலும் அநீதியை எதிர்த்துப் போராடுவது, அவளைச் சுற்றியுள்ள சமூகம் தனக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஆணாதிக்கத்தின் அதிகாரங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி இப்புத்தகம் விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போர் வெடித்ததன் காரணமாக நகரத்தில் சோபியின் கல்வி நிறுத்தப்பட்டு அவள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, 1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தையும் சந்திக்கிறாள்.
இக்கதையின் பெரும்பகுதி இவரின் சொந்த வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது, ஏனென்றால் இவரும் இதேபோன்ற கிராமப்புற ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர், சிட்டகாங்கில் சிறிது காலம் படித்தார், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இளங்கலைப் படிப்பிற்காகச் சென்று வங்காளப் பஞ்சத்தின் போது அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் கைதி
[தொகு]21 ஜனவரி 1947 அன்று, காவல்துறை தாக்குதலைத் தொடர்ந்து, அவர் தனது கல்லூரி நண்பர்களான அஞ்சனா குஹா மற்றும் அனிமா கோஷ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார், அதனால் இவரது முறையான கல்லூரிப்படிப்பு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. [2] இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், பர்த்வான் பல்கலைக்கழகத்தால் வங்காள இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
சுலேகாவின் ஆரம்ப கால சிறுகதைகளை யுகாந்தர் பத்திரிகை வெளியிட்டுள்ளது. சன்யால், சிந்துரே மேக் (சிவப்பு நிறத்துடன் கூடிய மேகங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதினார். இச்சிறுகதை தொகுப்பு வெகுவாக புகழப்பட்டுள்ளது. அவரது தேவால் பத்மா (சுவர்ப்பூக்கள்) இவரது இறப்பிற்கு பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது
தனி வாழ்க்கை
[தொகு]சுலேகா 1948 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை திருமண பந்தத்தில் இருந்துள்ளார்.இவருக்கு சுஜாதா சன்யால் என்ற ஒரு சகோதரியும் அபந்தி குமார் சன்யால் என்ற ஒரு மூத்த சகோதரரும் உண்டு.
இறப்பு
[தொகு]1962 ஆம் ஆண்டு லுகேமியா நோயால் அகால மரணமடைந்துள்ளார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Subrata Kumar Das (18 April 2009). "In Search of Sulekha Sanyal".
- ↑ Basu, Pradip. The Question of Colonial Modernity and Scottish Church College in 175th Year Commemoration Volume, Scottish Church College, April 2008, page 46.
மேலும் படிக்க
[தொகு]- இந்தியாவில் பெண்களின் எழுத்து: கிமு 600 முதல் தற்போது வரை, சுசி தாரு மற்றும் கே. லலிதா ஆகியோரால் திருத்தப்பட்டது, (புது டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 1993)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563195-1
- நபங்கூர் (தி சீட்லிங்), கௌரங்கா பி. சட்டோபாத்யாய் மொழிபெயர்த்தார், (கல்கத்தா: ஸ்ட்ரீ, 2001)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85604-30-4