சுருட்கொண்டை மனுக்கோடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருட்கொண்டை மனுக்கோடியா (Manucodia comrii) என்பது செழிப்பான, பெரிய, அதாவது 43 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினமொன்றாகும். ஊதா, கறுப்பு மற்றும் பச்சை நிறங் கொண்ட இறகுகளையும் செந்நிறக் கண்களையும் கொண்டிருக்கும் இதன் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதி இறகுகள் வெடிப்பான மஞ்சட் பச்சை நிறத்திலிருக்கும். இதன் தலையிறகுகள் சுருண்டும் வாலிறகுகள் நடுப் பகுதி நோக்கிச் சுருண்டும் காணப்படும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாக இருக்கும். மனுக்கோடியாக்களில் மாத்திரமன்றி சந்திரவாசி இனங்களிலேயே இதுதான் மிகப் பெரிய பறவையினமாகும்[2].

பப்புவா நியூகினி நாட்டுக்குத் தனிச்சிறப்பான பறவையினமான சுருட்கொண்டை மனுக்கோடியா அந்நாட்டின் துரோபிரியாந்து தீவுகள் மற்றும் அதனை அண்டிய தீவுக் கூட்டங்களிற் காணப்படும். சந்திரவாசி இனங்களில் மிகவும் நிறை கூடிய பறவையினங்களில் ஒன்றான இது முதன்மையாகப் பழங்களை உட்கொள்ளும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Manucodia comrii". IUCN Red List of Threatened Species 2017: e.T22706128A118812981. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22706128A118812981.en. https://www.iucnredlist.org/species/22706128/118812981. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Perrins, Christopher, Firefly Encyclopedia of Birds. Firefly Books. ISBN 1-55297-777-3
  • BirdLife International (2004). Manucodia comrii. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 30 October 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்[தொகு]