சுரப்பிக்கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரப்பிக்கட்டி (Adenoma) என்பது சுரப்பிகளின் பரப்பில் தோன்றும் தேவையற்ற அதிகரித்த வளர்ச்சியினைக் குறிக்கிறது. இது தீங்கற்ற கட்டியாகும். இது, வளர்ச்சியின் காரணமாக நரம்புத் தொகுதியில் அழுத்தும் போது வலியினை ஏற்படுத்துகிறது. இவ்வகைக் கட்டிகள் சுரப்பியில் தான் தோன்றும் என்பதில்லை. சுரக்கும் பண்படைய திசுக்களிலும் தோன்றும். இந்த வகைக் கட்டிகள் புற்றாக மாறவும் கூடும்.

இயக்குநீரைச் சுரக்கும் சுரப்பிகளில் பெரிதாக வளர்ந்து விட்ட கட்டிகள் அதிக அளவில் இயக்குநீரைச் சுரப்பதால், அந்த உறுப்பு இயக்குநீர் அதிகரிக்கக் காரணமாகிறது. இது குடலில் பொதுவாக இம்மாதிரியானக் கட்டிகள் தோன்றுகின்றன. குடலின் உள்பகுதியினைக் நோக்கப் பயன்படும் (colonoscope) குடல்நோக்கியின் துணையுடன் கண்டுகொள்ளலாம். தொடக்க நிலையில் கண்டு அறுவை செய்து கொண்டால் நல்லது. இல்லையெனில் அது புற்றாக வளர வாய்ப்புகள் அதிகம். பிச்சூட்டரியில் தோன்றும் கட்டிகள் அறுவை மருத்துவம் மூலம் நல்ல பயனைக் கொடுக்கிறது. இயக்குநீர் மருத்துவமும் உள்ளது. பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இது தைராய்டு சுரப்பிக்கும் பொருந்தும். மார்பகத்திலும் இம்மாதிரிக் கட்டிகள் தோன்றக்கூடும். அறுவை மருத்துவம் நல்லது. இளம்பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. அட்றினல் சுரப்பியிலும் இதுபோன்றக் கட்டிகள் தோன்றும். அரிதாகவே புற்றாக மாறுகிறது. சுரப்புநீர் அதிகம் தோன்றும். சிறுநீர் சுரப்பிச் சுவரிலும் தோன்றும். அரிதாக நுரையீரல், குடல்வால்,கல்லீரல் போன்ற உறுப்பிகளிலும் காணப்படும்.

சுரப்பிச்சுவர் புற்று (Adenocarcinoma) என்பது சுரப்பிக் கட்டிகள் புற்றாக மாறும்போது இம்மாதிரியான வளர்ச்சி புற்றுச்சுவர் பற்று எனப்படுகின்றன.

வலைதளத்திலிருந்து பெற்ற தகவல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரப்பிக்கட்டி&oldid=2748178" இலிருந்து மீள்விக்கப்பட்டது