உள்ளடக்கத்துக்குச் செல்

சுய பாதுகாப்பு சாதனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுமான தளத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்கள்

சுய பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protective equipments) என்பவை பாதுகாப்பு உடைகள், தலைக்கவசங்கள், கண்ணாடிகள் அல்லது பிற ஆடைகள் அல்லது அணிந்திருப்பவரின் உடலை காயம் அல்லது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கருவிகள் ஆகும். பாதுகாப்பு உபகரணங்களால் தீர்க்கப்படும் ஆபத்துகளில் உடல் ரீதியான காயங்கள், மின் அதிர்வுகள், வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், வேதிப்பொருள்களால் ஏற்படுத்தப்படுபவை, தீ நுண்மிகளால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் காற்றுவழியாகப் பரப்பப்படும் துகள்கள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு தொடர்பான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வேலை தொடர்பான தொழில் பாதுகாப்பிற்காகவோ மற்றும் சுகாதார நோக்கங்களுக்காகவோ அல்லது விளையாட்டு மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகவோ அணியப்படலாம். பாரம்பரிய வகை ஆடைகளின் மேலேயே "பாதுகாப்பு ஆடைகள்" பயன்படுத்தப்படுகின்றன. மேலும், துணிப்பட்டைகள், தடுப்புக் காப்புகள், கேடயங்கள் அல்லது முகமூடிகள் போன்றவை ஒரு துாய்மையான அறையில் இருப்பதைப் போன்றதான ஒரு நிலையில் இருக்கும்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் நோக்கமானது, பொறியியல் கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளால் அபாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்குக் குறைக்க சாத்தியமில்லாத போதோ அல்லது பயனுள்ளதாக இல்லாதபோதோ பணியாளர்களின் ஆபத்துக்களைக் குறைப்பதாகும். ஆபத்தான சூழ்நிலைகள் அல்லது ஆபத்துகள் இருக்கும்போது சுய பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. சுய பாதுபாப்பு உபகரணங்கள் ஆனவை ஆபத்தின் மூலத்தில் உள்ள ஆபத்தை அகற்ற இயலாதது என்ற தீவிர வரம்பைக் கொண்டுள்ளது. இந்த உபகரணங்கள் பழுதுபட்டாலோ, செயலிழந்தாலோ ஊழியர்கள் அபாயத்திற்கு ஆளாக நேரிடும். [1]

ஏதாவதொரு சுய பாதுபாப்பு சாதனத்தை அணிந்தவர் / பயனரானவருக்கும் அவர் பணிபுரியும் சூழலுக்கு இடையே ஒரு தடையை விதிக்கிறது. இந்த சாதனங்கள் இவற்றை அணிந்தவருக்கு கூடுதல் சிரமங்களை உருவாக்கக் கூடும்; அவர்களின் வேலையைச் செய்வதற்கான அவர்களின் திறனைக் குறைத்து, குறிப்பிடத்தக்க அளவிலான வசதியின்மையை உருவாக்குகிறது. இத்தகயை வசதியின்மையோ, சிரமமோ சுய பாதுகாப்பு சாதனங்களை உபயோகப்படுத்துவதை ஊழியர்கள் தவிர்ப்பதற்கோ, விரும்பாமலிருப்பதற்கோ காரணமாகலாம். அவ்வாறு அந்த ஊழியர்கள் சுய பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தத் தவறும் போது, காயம், உடல்நலக்குறைவு அல்லது தீவிர சூழ்நிலைகளில் மரணம் போன்ற ஆபத்திற்கு வழிவகுக்கலாம். நல்ல பணிச்சூழலியல் வடிவமைப்பு இந்த தடைகளை குறைக்க உதவும். எனவே, சுயபாதுகாப்பு உபகரணங்களின் சரியான பயன்பாட்டின் மூலம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த உதவும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்ற பணியிடத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தலையீடுகளைப் பயன்படுத்தலாம். அபாயக் கட்டுப்பாடுகளின் வரிசைமுறையானது இது தொடர்பான கொள்கைக் கட்டமைப்பை வழங்குகிறது. இது முழுமையான இடர் குறைப்பு அடிப்படையில் அபாயக் கட்டுப்பாடுகளின் வகைகளை வரிசைப்படுத்துகிறது. வரிசைக்கு மேலே நீக்குதல் மற்றும் மாற்றீடு ஆகியவை உள்ளன, அவை ஆபத்தை முழுவதுமாக நீக்குகின்றன அல்லது ஆபத்தை பாதுகாப்பான மாற்றாக மாற்றுகின்றன.

வகைகள்

[தொகு]

சுய பாதுகாப்பு சாதனங்களானவை உடலின் எந்த பாகத்தினைப் பாதுகாக்கிறது என்பதைப் பொறுத்தோ அல்லது ஆபத்தின் வகையைப் பொறுத்தோ அல்லது ஆடை அல்லது துணைப்பொருள் இவற்றைப் பொறுத்தோ வகைப்படுகிறது. உதாரணமாக, மூடு காலணி என்ற ஒரு சுய பாதுகாப்பு சாதனமானது பல விதமான பாதுகாப்பினை வழங்கக்கூடும். குதிங்கால் பகுதியில் இருக்கும் இரும்பு மூடி மற்றும் உள்ளங்கால் பகுதியில் உள்ள உட்செருகல் ஆகியவை கால் கனமான பொருள்களினால் நசுக்கப்படுவது அல்லது கூர்மையான பொருள்களால் துளையிடப்படுவது போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. நீர்புகாத இரப்பர் மற்றும் மேற்பூச்ானது நீர் மற்றும் வேதிப்பொருள்களிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கின்றன. மேலும், இவற்றின் பளபளப்புத் தன்மை கதிர்வீச்சு வடிவிலான வெப்பம் மற்றும் மின் அதிர்ச்சிக்கான எதிர்ப்பினைக் காட்டுகிறது. ஒவ்வொரு உபகரணத்தின் பாதுகாப்பு பண்புகளையும் பணியிடத்தில் காணப்படும் அபாயங்களுடன் ஒப்பிட வேண்டும். அதிகமாக சுவாசிப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அதிக மாசுபாட்டிற்கு வழிவகுக்காது, அதே நேரத்தில், பயனர்களிடம் அதிக திருப்தியை ஏற்படுத்தும்..[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 2012-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Verbeek, Jos H.; Rajamaki, Blair; Ijaz, Sharea; Tikka, Christina; Ruotsalainen, Jani H.; Edmond, Michael B.; Sauni, Riitta; Kilinc Balci, F. Selcen (1 July 2019). "Personal protective equipment for preventing highly infectious diseases due to exposure to contaminated body fluids in healthcare staff". The Cochrane Database of Systematic Reviews 7: CD011621. doi:10.1002/14651858.CD011621.pub3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:31259389. பப்மெட் சென்ட்ரல்:6601138. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/31259389.