சுமி கியாட்சே அருவி

ஆள்கூறுகள்: 27°46′34″N 91°58′58″E / 27.7762°N 91.9829°E / 27.7762; 91.9829
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமி கியாட்சே அருவி
சுமி கியாட்சே அருவி is located in அருணாசலப் பிரதேசம்
சுமி கியாட்சே அருவி
அருணாசலப் பிரதேசத்தில் அருவியின் அமைவிடம்
Map
அமைவிடம்தவாங், அருணாசலப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு27°46′34″N 91°58′58″E / 27.7762°N 91.9829°E / 27.7762; 91.9829

சுமி கியாட்சே அருவி (Chumi Gyatse Falls)[a] அல்லது சுமிக் கியாட்சே) என்பது இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் மாவட்டத்தில், சீனாவின் திபெத் பகுதியின் எல்லைக்கு அருகில் உள்ள அருவிகளின் தொகுப்பாகும்.[2][3] உள்ளூர் பௌத்த பாரம்பரியத்தின் படி, மலைகளுக்கு இடையிலிருந்து தோன்றும் 108 புனித நீர் அருவிகள் திபெத்திய பௌத்த அறிஞர் பத்மசாம்பவரின் ஆசீர்வாதத்தை குறிக்கிறது.[4] சுமி கியாட்சே அருவியானது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நடைமுறை எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. ஒரு கணக்கின்படி வெறும் 250 மீட்டர் தொலைவில் உள்ளது.[5][b]

நிலவியல்[தொகு]

யாங்சே பகுதி

சுமி கியாட்சே அருவி யாங்சே [c] என்ற பகுதியில் உள்ளது. அங்கு திபெத்திலிருந்து சோனா சூ ஆறு இந்தியாவின் தவாங் மாவட்டத்தில் பாய்கிறது. அவை கிழக்கு-மேற்கு மலைத்தொடரால் உருவாக்கப்பட்ட உயரமான பீடபூமியின் ("யாங்சே பீடபூமி") குன்றின் முகத்தில் உள்ளன. அதன் நீர்நிலையானது மெக்மோகன் கோட்டின்படி இந்தியா-சீனா எல்லையாக செயல்படுகிறது.[7]

வடக்கே சில நூறு மீட்டர்கள் அருகே அமைந்துள்ள, தோம்சாங் (அல்லது தோங்சாங்) (27°46′49″N 91°58′37″E), என்ற இடம் குரு பத்மசாம்பவருடன் தொடர்புடைய பௌத்த தியான தலமாகும்.[8] வரலாற்றுக் காலத்தில் தோம்சாங் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. அதனால் அதன் கீழ் உள்ள ஆறு மற்றும் பள்ளத்தாக்குக்கு "தோம்சாங்ரங்" என்று பெயர் கொடுக்கப்பட்டது.[9][10] சீனா தொடர்ந்து "தோம்சாங் ஆறு" மற்றும் "தோங்சாங் அருவி" என்ற பெயர்களைப் பயன்படுத்துகிறது.[3][11]

அருவிகளுக்கு தெற்கே, யாங்சே பீடபூமியில் இருந்து எழும் நியுசரோங் எனப்படும் மற்றொரு ஆறு சோனா சூ என்ற ஆற்றுடன் இணைகிறது. சேச்சு என்று அழைக்கப்படும் ஒரு கிராமம், யாங்ட்சே பிராந்தியத்தின் முனையத்தைக் குறிக்கும் வகையில், இரு ஆறுகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[12]

2018 ஆம் ஆண்டு தொடக்கம் அருணாச்சல பிரதேச மாநிலம் அருவியை சுற்றுலா தளமாக மேம்படுத்தி வருகிறது. [13] தவாங் நகரத்திலிருந்து எளிதாகப் பயணிக்க புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. [13] ஜூலை 2020 இல், பத்மசாம்பவர் சிலையுடன் கூடிய கற்றல் மையம் ஒன்று திறக்கப்பட்டது. திபெத்திய யாத்ரீகர்கள் அருவியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. [13]

குறிப்புகள்[தொகு]

  1. Alternaive spellings: Chumig Gyatse[1] and Chumik Gyatse.
  2. Map measurements indicate a distance of 500 metres.
  3. Alternative spellings: Yangste, and Yangtze.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tawang district DC Kesang Ngurup Damo visits border village, The Sentinel, 31 March 2022.
  2. Manoj Joshi (14 December 2022). "Scale of the Recent Chinese Intrusion in Tawang Is a Cause for Concern". The Wire. https://thewire.in/security/scale-of-the-recent-chinese-intrusion-in-tawang-is-a-cause-for-concern. 
  3. 3.0 3.1 Hemant Adlakha (16 December 2022), "The Tawang Clash: The View From China", The Diplomat, ProQuest 2754866279
  4. Shantanu Dayal (December 15, 2022). "Why Yangtse? At LAC, a long saga of military grit". Hindustan Times.
  5. Karishma Hasnat (20 October 2020). "This Arunachal waterfall near LAC is being developed for tourism. But China 'keeping an eye'". The Print. https://theprint.in/india/this-arunachal-waterfall-near-lac-is-being-developed-for-tourism-but-china-keeping-an-eye/526953/. 
  6. AP, Indian, Chinese troops clash at border in fresh faceoff, NBC News, 13 December 2022.
  7. Shantanu Dayal (15 December 2022), "Why Yangtse? At LAC, a long saga of military grit", The Hindustan Times, ProQuest 2754518605
  8. "Geographical names of Tibet AR (China): Tibet Autonomous Region". KNAB Place Name Database. Institute of the Estonian Language. 2018-06-03.
  9. Aris 2012, ப. 85-86.
  10. Tenpa 2018, ப. 52-53, 125.
  11. Joseph P. Chacko, Did PLA grab Chumi Gyatser waterfall or Dongzhang Waterfall in Arunachal Pradesh?, Frontier India, 23 January 2022.
  12. *Praveen Swami (14 December 2022), "Tawang skirmish shows LAC's volatile. Army risking getting mired in Siachen-style resource trap", The Print
  13. 13.0 13.1 13.2 Karishma Hasnat (20 October 2020). "This Arunachal waterfall near LAC is being developed for tourism. But China 'keeping an eye'". The Print. https://theprint.in/india/this-arunachal-waterfall-near-lac-is-being-developed-for-tourism-but-china-keeping-an-eye/526953/. 

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமி_கியாட்சே_அருவி&oldid=3846354" இலிருந்து மீள்விக்கப்பட்டது