சுமா ஜோசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமா ஜோசன் ( Suma Josson ) ஒரு இந்திய-அமெரிக்கப் பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். பாக்சைட்டு சுரங்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதிப்புகள் பற்றிய இவரது நியமகிரி, யு ஆர் ஸ்டில் அலைவ் என்ற ஆவணத் திரைப்படம், [1] 2010 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் குறும்படம், சுற்றுச்சூழல் பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.

வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர், அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1992 இல் காட்சி ஊடகத்திற்கு மாறினார். [2] பல ஆவணத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். கவிதைகள் மற்றும் நாடகங்கள், ஒளியின் அறுவடை (நாடகங்களின் தொகுப்பு), மற்றும் சுற்றளவுகள் (ஒரு புதினம்) என்ற மூன்று புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். .

இவரது முதல் திரைப்படம் ஜன்மதினம் (1998) மூன்று மாநில விருதுகளை வென்றது. மேலும் 1999 பெர்லின் விழா உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஜெர்மன் சர்வதேச கூட்டு தயாரிப்பில் 'பெண்கள் இடம்' என்ற தலைப்பில் வர்த்தக படங்கள் என்ற ஆவணப்படத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட ஐந்து பெண் திரைப்பட தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். சாரீஸ் (1999) இவரது இரண்டாவது திரைப்படமாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "Media exposure rocked mining boat in Niyamgiri: Filmmaker". Sify. Archived from the original on 19 February 2011. பார்க்கப்பட்ட நாள் 14 December 2010.
  2. . 3 December 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமா_ஜோசன்&oldid=3891654" இலிருந்து மீள்விக்கப்பட்டது