சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம்
சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
இடம் | சுமாத்திரா, இந்தோனேசியா |
ஒப்பளவு | இயற்கைக் களம்: (vii), (ix), (x) |
உசாத்துணை | 1167 |
ஆள்கூற்று | 02°30′S 101°30′E / 2.500°S 101.500°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2004 (28th தொடர்) |
ஆபத்தான நிலை | 2011–... |
சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 2004 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமத்ரா தீவில் உள்ள மூன்று இந்தோனேசிய தேசிய பூங்காக்களை உள்ளடக்கியது: குனுங் லியூசர் தேசிய பூங்கா, கெரின்சி செப்லாட் தேசிய பூங்கா மற்றும் புக்கிட் பாரிசன் செலட்டன் தேசிய பூங்கா ஆகியவை ஆகும். இந்தக் களம் உலக பாரம்பரியக் களத்தைத் தீர்மானிப்பதற்கான தர வகைப்பாடு vii இன் கீழ்- சிறந்த கண்ணுக்கினிய அழகு; ix- குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை குறிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு; மற்றும் x- இயற்கையான சூழலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க இயற்கை வாழ்விடங்களைக் கொண்டுள்ள பாதுகாப்புப் பகுதி ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது [1] சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடு பாரம்பரியக் களம் 2011 ஆண்டு முதல் ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இடம்பிடித்தது, வேட்டையாடுதல், சட்டவிரோதமாக உள்நுழைதல், விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் தளத்தின் வழியாக சாலைகள் அமைக்கும் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இது உதவுகிறது.[2]
இட அமைவு மற்றும் பரப்பளவு
[தொகு]சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடு பாரம்பரியக் களம் மூன்று தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது: குனுங் லீசர் தேசிய பூங்கா (8629.75 கி.மீ2 ), கெரின்சி செப்லாட் தேசிய பூங்கா (13,753.5 கி.மீ2 ) மற்றும் புக்கிட் பாரிசன் செலாடன் தேசிய பூங்கா (3568) கிமீ2) ஆகியவை ஆகும். மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 25,000 சகிமீ ஆக உள்ளது. சுமத்ரா தீவின் இந்தக் குறிப்பிடப்பட்ட பகுதி வேறுபட்ட பல்லுயிர்த்தன்மையைக் கொண்ட தாழ்நிலம் மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுகளை உள்ளடக்கியதாக இருந்ததால், சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடு பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் மிகப்பரந்த அளவில் இருந்த வெப்பமண்டல மழைக்காடுகள் 50 ஆண்டுகள் கால இடைவெளியில் மிகச்சுருங்கி மிகக்குறுகிய பகுதியாக ஆகிவிட்டது.
இரண்டாவதாக, பாரம்பரியக் களத்தை உருவாக்கும் தேசிய பூங்காக்கள் அனைத்தும் நன்கறியப்பட்ட சுமத்ராவின் முதன்மையான முதுகெலும்புப் பகுதியாக அமைந்துள்ள, சுமத்ராவின் ஆண்டிஸ் என அழைக்கப்படுகின்ற புக்கிட் பாரிசன் மலைத்தொடர்களில் அமைந்துள்ளன.மேலும், இப்பகுதியைச் சுற்றிலும் அற்புதமான, காண்பதற்கினிய இயற்கைக் காட்சிகளைக் காண முடியும். ஒவ்வொரு தளத்தின் மலைப்பகுதியும் சுமத்ராவின் புகழ்பெற்ற மற்றும் வளர்ச்சியடைந்த தாழ்நிலப் பகுதிகளுக்கு முக்கியமான மலைப்பாங்கான பின்னணியைத் தருகின்றன. அதிர்ச்சியூட்டும் குனுங் துஜு ஏரி( தென்கிழக்கு ஆசியாவின் மிக உயர்ந்த ஏரி), மாபெரும் மவுண்ட் கெரின்சி எரிமலையின் மகிமை, இயற்கை வன அமைப்புகளில் பல சிறிய எரிமலை, கடலோர மற்றும் பனிப்பாறை ஏரிகளின் கலவை ஆகியவை புக்கிட் சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடு பாரம்பரியக் களத்தின் அழகைக் காட்டுகிறது.
கடைசியாக, மூன்று தேசிய பூங்காக்களும் மிகவும் மாறுபட்ட வாழ்விடங்களைக் கொண்டுள்ளன மற்றும் சிறந்த பல்லுயிர் தன்மையைக் கொண்டுள்ளன . மொத்தம் மூன்று தளங்களும் சுமத்ராவில் மொத்த தாவர வகைகளில் 50% ஆகும். குனுங் லீசர் தேசிய பூங்காவில் குறைந்தது 92 உள்ளூர் பொது இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரத்தில் உலகின் மிகப்பெரிய மலர் (இராஃப்லேசியா அர்னால்டி) மற்றும் மிக உயரமான மலர் (டைட்டன் ஆரம்) ஆகிய இரண்டும் இடம் பெற்றுள்ளன. சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் சமீபத்தில் 2004 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சுமத்ராவின் 2.5 மில்லியன் ஹெக்டேர் மழைக்காடுகள் இவற்றின் வெவ்வேறு பல்லுயிர்தன்மை வாழிடத்தின் காரணமாக ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வெவ்வேறு பல்லுயிர். [1]
புவியியல் மற்றும் காலநிலை
[தொகு]தீவின் வடக்கே உள்ள குனுங் லீசர் தேசிய பூங்கா 150 கி.மீ நீளமும், 100 கி.மீ அகலமும் கொண்ட பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதியை உள்ளடக்கிய பகுதி ஆகும். பூங்காவின் 40% பரப்பு மிகவும் செங்குத்தானதும் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்ததும் ஆகும். தெற்கு திசையில் தாழ்வான பகுதியில், பூங்காவின் 12% மட்டுமே, கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திற்குக் கீழே உள்ள பகுதியாகும். ஆனால், 25 கி.மீ. அளவிற்கு கடற்கரையை நோக்கி தாழ்ந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. பதினொரு சிகரங்கள் 2,700 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டவை ஆகும். இவற்றில் மிக உயர்ந்த இடம் குனுங் லியசர் சிகரம் ஆகும். இதன் உயரம் 3,466 மீட்டர் ஆகும். குனுங் லீசரைச் சுற்றியுள்ள பகுதி லீசர் சுற்றுச்சூழல் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UNESCO: Description, retrieved 02-12-2009
- ↑ Danger listing for Indonesia’s Tropical Rainforest Heritage of Sumatra, retrieved 22-06-2011