சுமங்கலி (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமங்கலி - கணவனுடன் வாழும் பெண்.

சிறப்பு[தொகு]

இந்து சமய சடங்குகளில், திருமணமாகிக் கணவனுடன் இணைந்து வாழும் பெண்கள் சிறப்புப் பெறுவர். சுமங்கலி என்னும் சொல், மங்கலமானவள் என பொருள் படும். சுமங்கலிகளை செல்வச் செழிப்பிற்குக் கடவுளான இலக்குமியின் ஒப்பாகக் கொள்வர்.

அடையாளம்[தொகு]

இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக நெற்றியில் குங்கும திலகம் இட்டுக்கொள்வார்கள். திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் நெற்றித் திலகத்துடன் தலை வகிட்டின் நுனியிலும் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வார்கள். பொட்டு வைக்கும்போது கிழக்குத் திசை நோக்கி நின்று வைப்பது பெண்களுக்கு இலக்குமி அருளைப் பெற்றுத் தரும் என்பது ஒரு நம்பிக்கை.[1]

சுமங்கலி பூசை[தொகு]

வீட்டில் மங்கல நிகழ்வுகள் நடக்கும் போதும் சில வேண்டுதல்களுக்காகவும் சுமங்கலிப் பூசை செய்வதும் உண்டு. இதனை சுகாசினி பூசை என்றும் சொல்வர். செய்யும் முறை, அந்தந்த குடும்பங்களின் வழக்கத்திற்கு அமைய வேறுபடும். ஆயினும் அடிப்படையில் முதிய சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களை வணங்கி, விருந்து படைத்து, புதுப்புடவையுடன் தாம்பூலமும் கொடுத்து அவர்களது நல்லாசி வேண்டுவர்.[2]

வரலட்சுமி நோன்பு[தொகு]

சுமங்கலி பெண்கள் ஆண்டுதோறும் வரலட்சுமி நோன்பு கடைபிடிப்பார்கள். தமக்காக மட்டுமன்றித் தம் குடும்பத்தினர் அனைவரினதும் நல்வாழ்வுக்காக அவர்கள் இந்த நோன்பைக் கடைபிடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]