உள்ளடக்கத்துக்குச் செல்

சுமங்கலித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தின் பஞ்சாலைகளில் வளரிளம்பருவப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதற்காக சுமங்கலி திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அதிக பஞ்சாலைகளைக் கொண்ட ஈரோடு, திருப்பூர், கோவை, உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில், இந்த திட்டத்தின் செயல்பாடு அதிகமாக உள்ளது. மூன்று அல்லது ஐந்து வருட கால ஒப்பந்தத்தின்படி ஏழைக் குடும்ப இளம்பெண்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்படுகின்றனர்.

மூன்று வருடங்கள் பணிபுரிய முப்பதாயிரம் என்றும், ஐந்து வருடத்திற்கு ஐம்பதாயிரம் என்றும் பல திட்டங்கள் உள்ளன. பணிபுரியும் போது அதிக நேரம் உழைக்க வைக்கப்படும் இவர்கள் பஞ்சாலையின் பஞ்சின் காரணமாக சுவாச சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் பொய்க்குற்றம் சாட்டி பணம் தராமல் அனுப்பும் அணுகுமுறையும் உள்ளது.

வேலைக்கடுமை தாங்க முடியாமல் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.[1]

இதில் பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் குறைந்த தமிழகத்தின் பகுதிகளில் இருந்து தரகர்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றனர். முன்பு தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மொத்தமாகப் பெண்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இப்போது அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாலும் முன்னரே பணிபுரிந்த பெண்களின் சிரமத்தைக் கண்டும் பொதுமக்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அதிகம் அனுப்பாததால், தரகர்கள் மன்னார்குடி, கும்பகோணம், நாமக்கல், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களை அதிகம் அணுகுவதாகவும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலிருந்து, ஆராய்ச்சிப்பணிக்காக கள ஆய்வு மேற்கொண்ட சமூக ஆர்வலர் காயத்ரி குறிப்பிடுகிறார்..மேலும் பஞ்சாலை நிறுவனர்கள் பெரும்பாலும் ஆளும் அல்லது எதிர்க்கட்சியை சார்ந்தோராய் இருப்பதால் இவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிடுகிறார்.[2]

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

சுமங்கலித் திட்டத்தில் வேலை பார்க்கும் ரம்யா என்ற பெண்ணின் கதையை மையமாகக் கொண்டுபற்சக்கரம் என்ற புதினத்தை எஸ். தேவி எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.thehindu.com/news/cities/Madurai/sumangali-scheme-draws-flak/article4914353.ece
  2. புதிய தலைமுறை; மகளிரும் மக்களாட்சியும்;பஞ்சாலைகள் நிகழ்ச்சி;24.07.2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமங்கலித்_திட்டம்&oldid=3860143" இலிருந்து மீள்விக்கப்பட்டது