பேச்சு:சுமங்கலித் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழலி, விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கட்டுரை, செய்தியாக தெரிகிறது. உங்களுக்கு செய்திகளை எழுத விருப்பம் இருந்தால்,விக்கிசெய்திகள் என்ற திட்டத்தில் எழுதுங்கள். :) இத்தகைய கட்டுரைகளை இங்கே தவிர்க்குமாறு வேண்டுகிறேன். இந்த கட்டுரையில், திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் காலம், நிதி ஒதுக்கீடு போன்ற தேவையான தகவல்களை மட்டும் வழங்குங்கள். விமர்சனங்களையோ, கருத்தையோ கட்டுரையில் தவிருங்கள். அவற்றை குறிப்பிட வேண்டிய தேவை இருந்தால், கட்டுரையில் ”விமர்சனங்கள்/குறைகள்” எனத் தனிப் பிரிவைத் தொடங்கி, சில வரிகளில் குறிப்பிடலாம். // பொய்க்குற்றம் சாட்டி பணம் பெறும்//, //ஆளும் அல்லது எதிர்க்கட்சியை சார்ந்தோராய் இருப்பதால்// போன்ற விமர்சனம் மிகுந்த வரிகளைத் தவிருங்கள். சர்ச்சைக்குரியவற்றிற்கு ஆதாரம் தேவைப்படும். நீங்கள் படித்த செய்தியை அப்படியே எழுத வேண்டாம். கட்டுரை நடைக்கு ஏற்ப உரை திருத்தி, தேவையான வரிகளை மட்டும் உட்படுத்தி எழுதுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள், உதவுவோம். உங்கள் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காக சொல்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:57, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

இது செய்திக்கட்டுரை அன்று. கலைக்களஞ்சியத்தில் இடம் பெற வேண்டிய தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. தொடர்ந்து பல ஆண்டுகள் ஊடகங்களில் அடிபட்டு வரும் போக்கு. இன்னும் நிறைய ஆதாரங்கள் சேர்த்து கட்டுரையை மேம்படுத்தினால் போதுமானது.--இரவி (பேச்சு) 09:27, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
அப்படியெனில் கட்டுரையின் நடை மாற்றப்பட வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:29, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]