சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியம் (பிறப்பு: ஆகத்து 5 1946) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். பேருந்து ஓட்டுநரான இவர் சுங்கை ஜாவி சுப்பிரமணியம், சுங்கை ஜாவி கவிஞர், புதுமைக் கவிதாசன் போன்ற புனைப்பெயர்களில் எழுத்துத்துறையில் நன்கறியப்பட்டவர். மேலும் இவர் ஒரு வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞருமாவார். சித்த வைத்தியத்தில் பயிற்சியுள்ளவரும், உடல் நோய்கள் மருந்துகள் பற்றிய ஆலோசகரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1963 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வு, கவிதைகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "முத்தமிழ் முத்து" (நாடகம், 1971)
  • "சக்திவேல் பாமாலை" (1980)
  • "இலட்சியங்கள்" (சிறுவர் கவிதை நூல், 1990)
  • "பரமஹம்சரின் பக்தி அமுதம்" (கட்டுரை, 1992)
  • "சின்னஞ்சிறு பூக்கள்"
  • "சந்தனப் பூக்கள்"

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • ஐந்தரை பவுன் தங்கப் பதக்கத்துடனான "முத்தமிழ்ச் சித்தர்" விருது (1993)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தங்கப் பதக்கம் (2005)

உசாத்துணை[தொகு]