சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்பிரமணியம் பூங்கா
Subramaniam Park
Subramaniam Children’s Park, Jaffna.JPG
வகைநகரப் பூங்கா
அமைவிடம்யாழ்ப்பாணம், இலங்கை
ஆள்கூறு9°39′39.60″N 80°00′45.50″E / 9.6610000°N 80.0126389°E / 9.6610000; 80.0126389ஆள்கூறுகள்: 9°39′39.60″N 80°00′45.50″E / 9.6610000°N 80.0126389°E / 9.6610000; 80.0126389
Operated byயாழ்ப்பாண மாநகரசபை

சுப்பிரமணியம் பூங்கா எனப் பொதுவாக அறியப்படும் சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு நகர்ப்புறப் பூங்கா. இது யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சுப்பிரமணியம் பூங்கா, 1950களில் அப்போதைய யாழ்ப்பாணம் நகரசபையால் உருவாக்கப்பட்டது. உள்ளூர் மருத்துவரான எஸ். சுப்பிரமணியம் இதற்குத் தேவையான பெருந்தொகைப் பணத்தை நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.[1][2] இதனால் இப்பூங்காவுக்கு அவருடைய பெயரில் சுப்பிரமணியம் பூங்கா எனப் பெயரிடப்பட்டது.[1] பின்னாளில் உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி. தர்மலிங்கம் இவருடைய மருமகன்.[1]

உள்நாட்டுப் போர்க் காலத்தில் இது பெருமளவு சேதம் அடைந்தது. குறிப்பாக 1990ல் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகளில் இது முற்றாகவே அழிவுற்றது.[2][3] தொடர்ந்து 14 ஆண்டுகள் பயன்படாமல் இருந்த இப்பூங்கா 2004 ஆம் ஆண்டில், யுனிசெவ் வழங்கிய 2 மில்லியன் இலங்கை ரூபாவைப் பயன்படுத்தி திருத்தி அமைக்கப்பட்டது.[3] திருத்தப்பட்ட பூங்காவை 2006 மே 7ம் தேதி அப்போதைய மாவட்டச் செயலாளர் கே. கணேஷ் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.[4] 2010ல் பூங்காவின் முக்கிய அம்சமாக இருந்த அலங்கார நீரூற்று கொழும்பைச் சேர்ந்த தனியார் நிறுவனமான எல். பி. பினான்ஸ் நிறுவனத்தினால் திருத்தி அமைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]